India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் பூவாய்பட்டி சேர்ந்த மகாமுனியின் மனைவி கோகிலா (28) கர்ப்பமாக இருந்த நிலையில் காவல்காரன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். பிரசவவலியால் தோகைமலை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தையை பெற்ற பிறகு, அதிக ரத்தப்போக்கால் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். மகாமுனியின் புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.

கரூர் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. மேலும் விவரங்களுக்கு<

கரூரில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Supervisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.25,000 – ரூ.50,000 வழங்கபடும். எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் <

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க <

கரூர் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமும் இன்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

கரூர் மக்களே.., சுயதொழில் தொடங்க ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு! நமது மாவட்டத்தில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க, விவரங்கள் அறிய <

கரூர் மக்களே.., நமது மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனசுழற்சி மூலம் பூர்த்தி செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் <

கரூர்: வெண்ணமலை எம்.ஜி.ஆர் சிலை அருகே, சுமதி என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, அதே வழியில் விஜயகுமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சுமதி மீது மோதியதில், சுமதி படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கரூர்: தளவாபாளையம் அருகே கிழக்கு தவிட்டுப்பாளையம் தர்மராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்(40). இவரது மனைவி ஜெயலட்சுமி(36) 108 ஆம்புலன்ஸில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார்(27) என்பவர் ஜெயலட்சுமியின் வாட்ஸ்-ஆப் ஸ்டேட்டஸிற்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.