Karur

News September 5, 2024

EX அமைச்சர் தம்பி 2 நாள் சிபிசிஐடி விசாரணை

image

நில மோசடி வழக்கில் கடந்த இரண்டாம் தேதி சி பி சி ஐ டி போலீசார் முன்னாள் அமைச்சர் தம்பி எம்.ஆர். சேகரை கைது செய்து நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர் படுத்தினார். சிபிசிஐடி போலீசார்
காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டனர். அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

News September 5, 2024

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு

image

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று வெள்ளியணை காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட கடந்த 12.8.24 தேதி இரவு நடந்த கொலை மற்றும் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்த அலுவலர்கள் மற்றும் காவலர்களான , எழிலரசன், அன்புச்செல்வன், திருமுருகன், செல்லப்பாண்டி ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பாராட்டி வெகுமதி வழங்கினார்.

News September 5, 2024

கரூர்: ரூ.101 கோடியில் பாலம் அமைக்கும் பணி தீவிரம்

image

திருச்சி மாவட்டம் உன்னியூர் – கரூர் மாவட்டம் நெரூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே போக்குவரத்துக்கான உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி ரூ.101.37 கோடி மதிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 65 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், 2025ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பாலப் பணிகள் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 5, 2024

கரூரில் நில மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது

image

கரூரில் 22 ஏக்கர் நில மோசடி வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய ரூ.100 கோடி நில மோசடி வழக்கில், 7வது நபராக யுவராஜ் என்பவரை நேற்று இரவு சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட யுவராஜ், கரூர் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

News September 5, 2024

பிறை தென்படவில்லை: கரூர் அரசு காஜி அறிவிப்பு

image

கரூர் அரசு தலைமை காஜியின் அறிவுறுத்தலின்படி, ஹிஜ்ரி 1446 ஸஃபர் மாதம் 29ஆம் தேதி புதன் கிழமை, ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை, ரபீஉல் அவ்வல் மாத முதல் பிறை சென்னையிலும், இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை. ஆகையால், வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி ரபீஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரீஅத் முறைப்படி நிச்சயிக்கப்படுகிறது என கரூர் அரசு காஜி சிராஜுத்தீன் அஹ்மத் அறிவித்துள்ளார்

News September 5, 2024

கரூர்: போட்டித் தேர்வுக்கு கோட்டாட்சியர் அறிவுரை

image

கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நேற்று டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான கலந்துரையாடல் மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு நூலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கோட்டாட்சியர் முகமது பைசல் கலந்துகொண்டு பேசுகையில் “போட்டித் தேர்வில் வெற்றிபெற தாழ்வு மனப்பான்மையை கைவிடுங்கள், சுயபரிசோதனை செய்து முன்னேறுங்கள் கஷ்டப்பட்டு படிக்காமல் இஷ்டப்பட்டு படியுங்கள்” என்றார்.

News September 5, 2024

கரூர் மாவட்டத்தில் 9 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது

image

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினத்தை முன்னிட்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு கல்வி பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருது வழங்கி வருகிறது. இதன்படி, கரூர் மாவட்டத்திற்கு, தொடக்க, நடுநிலை பள்ளிக்கு 3, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிக்கு 3, மாநில கல்வியியல் பயிற்சி நிறுவனம் சார்ந்து 2, தனியார் பள்ளி சார்பில் 1 என 9 பேர் தேர்வு செயய்யப்பட்டுள்ளனர்.

News September 4, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக கரூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் UPSC-2025 தேர்வுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு www.tahdco.com என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News September 4, 2024

கரூரில் தேசிய ஊட்டச்சத்து வார விழா

image

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து கண்காட்சியை தொடங்கிவைத்து பார்வையிட்டார். அருகில் அரசு கலைக்கல்லூரி முதல்வர் மற்றும் நிர்வாகத்தினர் வேளாண்மை துறையினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News September 4, 2024

கரூர் அருகே அட்டகாசம்: 4 பேர் கைது

image

வயலூரை சேர்ந்தவர் பாலமுத்து 64. இவர் கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி தனது நிலத்தில் ஆடு மாடுகளை மேய்த்து கொண்டிருந்த போது அங்கு வந்த கிருஷ்ணமூர்த்தி 50, சந்துரு 23, சஞ்சய் 20, நந்தகுமார் 21 ஆகியோர் கிணற்று தண்ணீர் பாய்ச்ச விடமாட்டாயா எனக்கூறி ஒயர்களை அறுத்து மீட்டர் பெட்டியை கிணற்றில் வீசியுள்ளனர். இதுகுறித்து எஸ்பியிடம் அளித்த புகாரின் பேரில் நேற்று லாலாபேட்டை போலீசார் வழக்குபதிந்துள்ளனர்.