Karur

News September 7, 2024

கரூர் மாவட்டத்தில் எத்தனை விநாயகர் சிலைகள்?

image

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட 4 தொகுதிகளை சேர்த்து இந்து முன்னணி சார்பில் 100க்கும் மேற்பட்ட சிலைகள் வைக்கப்பட்டன. மேலும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து 300 சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஒவ்வொரு விநாயகர் சிலைக்கும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News September 7, 2024

கரூரில் தொழில்நுட்ப உதவியாளர் பணி- விண்ணபிக்க

image

கரூர் மாவட்டத்தின் காலநிலை மாற்ற இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு பணிசெய்யும் பொருட்டு ஒப்பந்த அடிப்படையில் ஒரு தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு தகுதியுடையவர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. கரூர் வனக்கோட்டம், கதவு எண்: 44, பூங்கா நகர் பிரதான சாலை, தான்தோன்றிமலை, கரூர்-639005 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்மென மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்.

News September 6, 2024

கரூரில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக விளையாட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள கரூரை சேர்ந்த முன்னாள் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதளம் மூலம் மட்டுமே வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (www.sdat.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

News September 6, 2024

கரூர் மாநகராட்சி நல அலுவலர் பெயரில் போலி வாட்ஸப்

image

கரூர் மாநகராட்சி நல அலுவலராக பணிபுரிந்து வருபவர் லட்சிய வர்ணா அவரது பெயரில் போலி பேஸ்புக் , வாட்ஸ் அப் கணக்குகள் துவங்கி நண்பர்களிடம் பண உதவி கேட்டு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார் என தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது பெயரில் போலியான கணக்குகள் துவங்கிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இன்று சைபர் கிரைமில் அதிகாரியிடம் புகார் மனு அளித்தார். இதை அனைவருக்கும் share செய்யவும்.

News September 6, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்ட கிராமங்கள், நகர்ப்புறங்களில் வாழும் ஏழை, எளிய கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பேரிளம் பெண்கள் தங்களுக்கு தேவையான உதவிகளை அரசிடமிருந்து எளிய முறையில் பெற, தங்களது விவரங்களை  இணையதள முகவரியில் பதிவு செய்து உறுப்பினர் ஆகலாம் (https://tnsocialwelfare.tn.gov.in) என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 6, 2024

கரூரில் திருட முயன்ற 3 பேர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் நங்கவரம் சபரி மேடு பகுதியில் பார்த்திபன் என்பவர் மீன் கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் நேற்று திருச்சியை சேர்ந்த பிரவீன், குமார், சங்கப் பிள்ளை, ஆகிய 3 பேரும் இருசக்கர வாகனத்தில் வந்து மீன்களை திருடியபோது, கையும் களவுமாக பிடித்து குளித்தலை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 6, 2024

கரூர்: பீகாரில் தலைமறைவாக இருந்த கணவர் கைது

image

பீகார் மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் புக்கர்மாஜி – சன்மதிதேவி ஆகியோர் கரூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரிந்து வந்தனர். இதனிடையே மனைவியின் நடத்தையில் புக்கர்மாஜிக்கு சந்தேகம் ஏற்பட்டு அவரை கல்லால் தாக்கிக் கொன்று தப்பியோடினார். இந்த சம்பவம் தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த புக்கர்மாஜி நேற்று கைது செய்யப்பட்டார்.

News September 6, 2024

கரூரில் பூக்களின் விலை உயர்வு

image

கரூரில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. (ஒரு கிலோ மதிப்பீட்டில்), குண்டுமல்லி ரூ.800, முல்லைப்பூ ரூ.600, ஜாதிப்பூ 500, செவ்வந்தி பூ 200, ரோஜா பூ 300, சம்பங்கி பூ 250க்கும், மருவி நாலு கட்டு ரூ.100க்கும், துளசி 4 கட்டு ரூ.50க்கும் விற்பனையானது. சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News September 6, 2024

யுபிஎஸ்சி தேர்வு பயிற்சிக்கு அழைப்பு: கலெக்டர் தகவல்

image

கரூர்: தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சார்ந்த 100 மாணவர்களுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு ஓராண்டு பயிற்சி பயிற்சி வழங்கப்படவுள்ளது. இதற்கு 21 – 36 வயது நிரம்பிய, பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓராண்டு விடுதியில் தங்கி படிக்க வசதியும், பயிற்சிக்கான செலவையும் தாட்கோ வழங்கும். இதற்கு www.tahdco.com-ல் பதிவு செய்யலாம்.

News September 6, 2024

கரூரில் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர்  தங்கவேல், தலைமையில் அடுத்த வாரம் தொடங்கவுள்ள முதலமைச்சர் கோப்பை 2024-2025 க்கான விளையாட்டுப்போட்டிகள் நடத்துவது தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார்  உள்ளார்.