India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கரூரில் சட்டவிரோத கந்துவட்டி வசூல் செய்தால், அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் எச்சரித்துள்ளார். இதில், முறையாக பைனான்ஸ் தொழில் விதிமுறைகளை பின்பற்றாமல் மக்களுக்கு அதிக பணம் கொடுத்து வசூல் செய்து துன்புறுத்தினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
கரூர் சமத்துவபுரம் காந்தி நகரை சேர்ந்த சுகுமார் (44) நேற்று முன்தினம் லாரி மேடு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கரூர் மாவடியான் கோவில் தெருவில் வசித்து வரும் திருநங்கைகள் சுகுமாரிடம் பணம் கேட்டு தர மறுத்ததால் திருநங்கைகளும் சுகுமாரை தகாத வார்த்தை பேசி, மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து டவுன் போலீஸார் 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டம் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவினங்கள் குறைக்கிறது. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 திட்டத்தின் வாயிலாக 5,090 பேருக்கு ரூ.3 கோடியே 55 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 92 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 702 பேருந்துகளில் இயக்குவதற்கு தயார் நிலையில் உள்ள 556 பேருந்துகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் ஆய்வு செய்யப்பட்டன. கரூரில் தனியார் பள்ளி பேருந்துகளின் தரம் குறித்த ஆய்வின்போது ஓட்டுனர் வருகை இல்லாத, முதலுதவி பெட்டியை சரியாக பயன்பாட்டில் வைக்காத பேருந்துகளுக்கு அனுமதி தரக்கூடாது என எஸ்.பி பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட மேற்கு மட வளாகம் பகுதியில் செயல்படும் தனியார் ஹோட்டலில் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த கடை உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிலிண்டரை வெளியே எடுத்து வைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்து குளிர்வித்தனர். இதனால் பெரிய அளவில் விபத்து ஏற்பட இருந்தது தவிர்க்கப்பட்டது.
கரூர் திருக்காட்டுத்துறையை சேர்ந்தவர் சிவகுமார் 30. இவர் கடந்த மே 11ம் தேதி தனது எலக்ட்ரிக் பைக்கில் கரூர் சேலம் சாலையில் வந்துள்ளார். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவர் ஒட்டி வந்த ஈச்சர் சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா தரகம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர் தொழில்நுட்பம் ஆய்வகம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 லேப்டாப், இண்டக்சன் ஸ்டவ், ஸ்பீக்கர், போன் உள்ளிட்ட ரூ.75865 மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் திருடு போனது. பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கரூர் மாவட்டம் 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.48% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.48 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.37 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 88.80% பேரும், மாணவியர் 95.33% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
கரூர், ஆண்டான் கோவில் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் அஸ்வின்(11), விஷ்ணு(12), மாரிமுத்து(11). நண்பர்களான மூவரும் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் இன்று(மே 14) நீச்சல் பழக சென்ற நிலையில், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் மூவரையும் சடலமாக மீட்டனர். கரூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கும் நிலையில், 3 சிறுவர்களின் உயிரிழப்பு அப்பகுதியில் சோகத்தை ஏற்பட்டுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.