India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் வருகின்ற டிசம்பர் 21 மற்றும் 22 தினங்களில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ கண்காட்சி சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் நடைபெற உள்ளது. முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள், இலவச ஆயுர்வேத சிகிச்சை, பாரம்பரிய உணவு கண்காட்சி, அரிய வகை மூலிகை கண்காட்சி, யோகாசன பயிற்சி போன்றவை நடைபெற உள்ளது.

கரூர் மாநகராட்சி மண்டலம் 3 காந்திகிராமம், சணப்பிரட்டி மற்றும் மண்டலம் 4 தான்தோன்றிமலை, ராயனூர் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமான கட்டளை தலைமை நீரேற்று நிலையத்தில், அமராவதி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால் குடிநீர் குழாய்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால், குழாய்களை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. எனவே சுமார் 5 நாட்களுக்கு பிறகு குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

கரூர் மாவட்ட ஓய்வூதியதாரர்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 03.01.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலும் மற்றும் சென்னை கருவூலம் மற்றும் கணக்குத்துறை அலுவலர்கள் முன்னிலையிலும் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது. ஓய்வு ஊதியர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

“கலைஞர் கைவினை திட்டம் ” என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி அரசு ஆணை எண். 64, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை, நாள்: 06.12.2024 -இல் வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற www.msmeonline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் வளாகம் 69/10 சத்யமூர்த்தி நகர் தாந்தோணிமலை, தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் திருவள்ளுவர் மைதானத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 48வது பிறந்த நாளை முன்னிட்டு, 04.01.2025 – 05.01.2025 இரண்டு நாட்கள் மற்றும், 11.01.2025 – 12.01.2025 இரண்டு நாட்கள், மாணவ மாணவிகளுக்கான, மாபெரும் குழு போட்டிகள், முப்பெரும் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில், நடக்க இருப்பதால், அனைவரும் கலந்து கொள்ளுமாறு, திமுக நகர சார்பில் அழைப்பு விடுத்துள்ளது.

கரூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில், சுகாதார நிலையம், வேப்பம்பாளையம் பகுதியில் சமுதாயக்கூடம், மொச்ச கொட்ட பாளையம் மேல் நீர் தேக்க தொட்டி அமைத்தல், ஆத்தூர் பிரிவில் புற காவல் நிலையம் அமைத்தல், இன்னும் பல நிகழ்ச்சிகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, நாளை மாலை 4 மணிக்கு மேல் திறக்க உள்ளார் என அறிவிக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் அனைவரும் அவசியமாக கலந்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வந்த நிலையில், அமராவதி ஆற்றில் இன்று, சுமார் 90,000 கனஅடி நீர்வரத்து, வந்து கொண்டிருக்கின்றது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்கள், கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள, நாரதன சபா மற்றும் வாசுகி மஹால் தங்குமிடங்களில், பாதுகாப்பாக தங்கிக் கொள்ளுமாறு, மாநகராட்சி ஆணையர் சுதா அவர்கள் வலியுறுத்தினார்.

கரூர் மாவட்டம் கோவிந்த பாளையம் பகுதியில் சுகாதார நிலையம், வேப்பம்பாளையம் பகுதியில் சமுதாயக்கூடம், மொச்ச கொட்ட பாளையம் மேல் நீர் தேக்க தொட்டி அமைத்தல், ஆத்தூர் பிரிவில் புற காவல் நிலையம் அமைத்தல், இன்னும் பல நிகழ்ச்சிகளை மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை 4 மணிக்கு மேல் திறக்க உள்ள நிலையில் மழையின் காரணமாக தற்போது அனைத்து நிகழ்ச்சியும் ரத்து செய்யப்படுகிறது.

கரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டால், பொதுமக்கள் உடனடியாக 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண்களான 1077 என்ற எண்ணிலோ அல்லது 1800-425-4556, 04324-256306 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் வாட்ஸ்-அப் மூலமாக தகவல் தெரிவிக்க 82201-65405 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

1.கரூர் மாவட்டத்தில் கார்த்திகை தீபத்திருநாள் அனைத்து கோயில்களில் நடைபெற்றது.
2.அய்யர்மலை உச்சியில் கார்த்திகை தீப தரிசனம்
3.நெற்பயிர்கள் சாய்ந்ததால் விவசாயி வேதனை
4.குடகனாறு அணைக்கு வரலாறு காணாத தண்ணீர்
5.தொடர் கனமழை – நிரம்பி வழிந்த பில்லூர் குளம்
Sorry, no posts matched your criteria.