Karur

News December 23, 2024

முருங்கையில் கவாத்து அவசியம் : வேளாண் அலுவலர் ஆலோசனை

image

முருங்கை செடியில் நவ., டிச., மாதங்களில் கவாத்து செய்வது அவசியம் எனவும் அதன் நன்மைகள் குறித்து அரவக்குறிச்சி வட்டார வேளாண் அலுவலர் கண்ணன் ஆலோசனை கூறியுள்ளார். கவாத்து என்பது பக்க கிளைகளை வெட்டி ஒழுங்குபடுத்துவது, கவாத்து செய்வதால் புதிய கிளைகள், பூ, மொட்டுகளை துளிர்க்க வைக்கலாம். இதனால் காய்ப்பு தன்மை அதிகரிக்கும். காய்கள் தரம் உயரும். பூ வைத்த பிறகு கவாத்து செய்யக்கூடாது என அவர் கூறியுள்ளார்.

News December 22, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1. பசுபதிபாளையம் வகுப்பறை கட்டுமான பணியினை ஆய்வு செய்த ஆணையர்
2.தவெக., சார்பில் பால், முட்டை, ரொட்டி வழங்கல்
3.ஆயுர்மேளா நிகழ்ச்சி 2 நாள் நிகழ்வுகள்
4.ரவுடி கொலை வழக்கில் 4ஆவது குற்றவாளி கைது
5.அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களை சந்திக்கும் எம்.பி.

News December 22, 2024

பாலம்மாள்புரம் கட்டுமானப் பணியை பார்வையிட்ட ஆணையர்

image

கரூர் மாநகராட்சி மண்டலம்-1 பாலம்மாள்புரம் வார்டு-11ல் எஸ் எப் சி – பள்ளி மேம்பாட்டு மானியம் 2024-2025 திட்டத்தின் கீழ் பாலம்மாள்புரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணிகளை இன்று (22/12/2024) கரூர் மாநகராட்சி ஆணையர் சுதா ஆய்வு செய்தார். உடன் கரூர் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News December 22, 2024

கரூர் திருக்குறள் போட்டிக்கு ஆட்சியர் அழைப்பு

image

கரூர் மாவட்ட மைய நூலகத்தில், திருக்குறள் டிச.27ஆம் தேதி பேச்சுப் போட்டியும், டிச.30ஆம் தேதி திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியும், டிச.31ஆம் தேதி வினாடி-வினா போட்டியும் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயரை மாவட்ட மைய நூலகத்தில் நேரிலோ அல்லது 04324-263550 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு வரும் 24ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News December 21, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.சிபிஐஎம் , காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
2.வெண்ணைமலை பாலசுப்ரமணிய கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு -சீல்.
3.மாயனூர் பகுதியில் வீடுகளை சூழ்ந்த மழைநீர்
4.ஆயுர்வேத முகாமில் கலந்து கொண்ட அமைச்சர்
5.கரூர் மாவட்டத்தில் 143.70 மி.மீ மழைப்பொழிவு

News December 21, 2024

கோவில் இடத்தில் ஆக்கிரமிப்பு -சீல்.

image

கரூர் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமிக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்கும் பணியானது இன்று தொடங்கியது. வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமிக்கு 526 ஏக்கர் இடம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரப்பு இடங்களை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடைகள் ஏடிஎம் உள்ளிட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகின்றது.

News December 21, 2024

ஆயுர்வேத முகாமில் கலந்து கொண்ட அமைச்சர்

image

கரூர் சரஸ்வதி வெங்கட்ராமன் மஹாலில் மாவட்ட ஆயுர்வேத மருத்துவர்கள் நலச் சங்கம் நடத்தும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாமை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இந்த முகாமில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் அவர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

News December 21, 2024

கரூர் அருகே ஜவுளி நிறுவன குடோனில் தீ விபத்து

image

கரூர் அருகே மணல்மேடு பகுதியில் உள்ள அம்மன் டிரேடர்ஸ் என்ற தனியார் ஜவுளி நிறுவனத்தில் குடோனில் நேற்று இரவு, 8:30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மளமளவென பரவ தொடங்கியதால் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என கரூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2024

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் நாளை மக்களை சந்திப்பு

image

இந்தியா கூட்டணி-காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி இரண்டாவது முறையாக மகத்தான வெற்றியடையச் செய்த கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்களின் பேரன்பிற்கும், பேராதரவிற்கும்நன்றி தெரிவிக்கும் வகையில் நாளை கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி – தாந்தோணி ஒன்றியம், உப்பிடமங்கலம் பேரூராட்சி, புலியூர் பேரூராட்சியில் சுற்றுப்பயணம் செல்கின்றார்.

News December 20, 2024

கரூர் தலைப்புச் செய்திகள்

image

1.போராட்டம் செய்த 33 விசிக வினர் கைது
2.சாலை மறியல் செய்த சேர்மன் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு
3.பள்ளி வளாகத்தில் புகுந்து மாணவனை கடித்த வெறி நாய்
4.டீசல் திருடிய 10 பேர் மீது வழக்கு: 1 கார், 520 லிட்டர் டீசல் பறிமுதல்
5.கரூர் அருகே ஆம்னி பேருந்து விபத்து: போக்குவரத்து நெரிசல்

error: Content is protected !!