Karur

News June 17, 2024

பத்தாம் வகுப்பு மாணவா் தற்கொலை

image

கரூா் மாவட்டம் கடவூா் அடுத்த கவரப்பட்டியைச் சோ்ந்த சிவமணி மகன் லோகேஷ்கண்ணன்(16). இவா் அரசு பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில் சனிக்கிழமை காலை லோகேஷ்கண்ணன் கைப்பேசியில் நீண்ட நேரம் பெற்றோா் கண்டித்துள்ளனா்.இதனால் விரக்தியடைந்த லோகேஷ்கண்ணன் சனிக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து பாலவிடுதி போலீஸாா் வழக்குப்பதிந்தனர்.

News June 16, 2024

கரூர்: ரயில் சேவையில் மாற்றம்

image

கரூர், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் உள்ள லாலாப்பேட்டை – குளித்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதனால், நாளை 17.06.2024 ரயில் எண்.16812 சேலம்- மயிலாடுதுறை ரயில் 17.06.2024 கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய நேரம் நிறுத்தப்படும். சேலத்தில் இருந்து கரூர் வரை மட்டுமே ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது.

News June 16, 2024

முன்னாள் அமைச்சரின் முன் பிணை மனு ஒத்திவைப்பு

image

வாங்கல் குப்புச்சிபாளையம் காட்டூரை சேர்ந்த பிரகாஷ் என்பவரை மிரட்டித் தாக்கியதாகவும், அவருடைய ரூ.100 கோடி மதிப்பிலான சொத்தை எழுதி வாங்கியது தொடர்பாகவும் அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் பிணை கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதனை நேற்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் முன் பிணை வழக்கை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

News June 15, 2024

ரூ.1.31 கோடியில் சமூக பங்களிப்பு ஒப்பந்தம்

image

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், இன்று பவர் கிரீட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பாக, சமூக பங்களிப்பு நிதியில் கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.1.31கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News June 15, 2024

ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர ஆட்சியர் அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் அரசு ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதிகளில் சேர பெற்றோர் அல்லது
பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000க்கு மிகாமல் இருக்கவும் இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீ.க்கு மேல் இருக்கவும், விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளர் அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

முன்னாள் அமைச்சர் ரூ.100 கோடி மோசடி – புகார்

image

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது பிரகாஷ் என்பவர் கரூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள தனது நிலத்தை அபகரித்துவிட்டதாகவும், தனக்கும் தனது சொத்துக்கும் பாதுகாப்பு வேண்டுமென கரூர் காவல்நிலையத்தில் பிரகாஷ் என்பவர் புகார் அளித்துள்ளார்.

News June 14, 2024

கரூரில் புகையிலை பொருள் பறிமுதல்:  வாலிபர் கைது

image

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசியமங்கலம் 3 ரோடு அருகே குளித்தலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் தடைசெய்யப்பட்ட 75 கிலோ புகையிலை பொருட்கள் கொண்டுவந்தது தெரியவந்தது. அதனையடுத்து திருச்சி மாவட்டம் மணப்பாறை தாலுகா நரியம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் (33) என்பவர் மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர்.

News June 13, 2024

குளித்தலை அருகே சிறுவன் போக்சோவில் கைது

image

குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது சிறுவனும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இதில் 2 பேருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பமானார். அதிக வயிற்று வலியும், ரத்தப்போக்கு ஏற்பட்டதை அடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து குளித்தலை அனைத்து மகளிர் போலீசில் சிறுவன் மீது வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் நேற்று கைது செய்தனர்.

News June 13, 2024

கரூர்: மனைவியிடம் செல்போன் பேசியதற்கு கத்தி குத்து

image

கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாபேட்டை கொடிக்கால் தெருவை சேர்ந்தவர் சசிகுமார். இவர் லாலாபேட்டை மருதாண்டா வாய்க்கால் கரையில் நேற்று முன்தினம் நின்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவர் தனது மனைவியிடம் செல்போன் மூலம் தவறாக பேசியதை மனதில் வைத்துக் கொண்டு கத்தியால் ராஜலிங்கம் குத்தியுள்ளார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

News June 12, 2024

கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் ஜூன் 21ல் தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில் வேலை தேடுவோர் இளைஞர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள www. tnprivatejobs. tn. gov. in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04324 223555 மற்றும் 97891 23085 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு  ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!