Karur

News January 23, 2025

கரூரில் திமுக நிர்வாகி அதிமுகவில் ஐக்கியம்

image

இன்று கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாநகர் மேற்கு பகுதி 27 வது வட்டத்தை சார்ந்த திமுக கட்சியைச் சேர்ந்த செக்கர் மகாலிங்கம் அக்கட்சியிலிருந்து விலகி மாநகர் மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல் தலைமையில் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுக கட்சியில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர். உடன் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News January 23, 2025

ஆத்துப்பாளையம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு

image

கரூர் மாவட்டம் புகழூர் தாலுகா நொய்யல் ஆத்துப்பாளையம் அணையில் இருந்து நொய்யல் கால்வாய்க்கு உட்பட்ட பாசன நிலங்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதல் பிப்ரவரி 28-ந் தேதி வரை 196 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன்மூலம் புகழூர், மண்மங்கலம் தாலுகாவில் உள்ள 19 ஆயிரத்து 480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

News January 23, 2025

கரூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் வரும் 25ம் தேதி காலை 10:00 முதல், 1:00 மணி வரை அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகளூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கடவூர் ஆகிய பகுதிகளில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் ரேஷன் குறைதீர் முகாம் நடைபெறுகிறது. பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், புதிய ரேஷன் கோருதல், ஆகியவை குறித்து தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

கரூர் போலீசார் முக்கிய அறிவிப்பு 

image

கரூர் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதிகளில், அறை எடுத்து தங்குவோரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும், தங்குவோரின் நடவடிக்கையில், சந்தேகம் ஏற்பட்டால் உரிமையாளர் அல்லது மேலாளர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளிக்க வேண்டும் மாவட்ட எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News January 22, 2025

நொய்யல் பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி 

image

கரூர் மாவட்டம் நொய்யல், தவுட்டுப்பாளையம், நஞ்சை புகலூர், தோட்டக்குறிச்சி பகுதிகளில் அறுவடை செய்யும் வாழைத்தார்கள் தினசரி ஏல மார்க்கெட்டில் விற்க்கப்படுகிறது. பூவன் வாழைத்தார் ரூ.500, ரஸ்தாலி ரூ.400, பச்சை நாடான் ரூ.350, மொந்தன் ஒரு காய் ரூ. 6க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட தார் ஒன்றிற்க்கு ரூ.50 முதல் ரூ.100 வரை விலை குறைந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News January 22, 2025

கரூர் எஸ்பி முக்கிய அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும், அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்தவும், நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் விடுதியில் தங்குவோரின் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். மேலும் அறையில் தங்குவோரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டால், உரிமையாளர், மேலாளர்கள், காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, கரூர் எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

நாளை மக்களுடன் முதல்வன் திட்டம் அமைச்சர் கலந்து கொள்கிறார்

image

நாளை (22.01.2025) காலை 10.00 மணி முதல் வாங்கல் ,சோமுர், காதப்பாறை, மன்மங்கலம், குப்பிச்சிபாளையம் ,கீழ்கண்ட இடங்களில் நடைபெற உள்ள மக்களுடன் முதல்வர் முகாமில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்கள்.

News January 21, 2025

குளித்தலையில் மாபெரும் அதிமுக பொதுக்கூட்டம்

image

எம்ஜிஆரின் 108வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாபெரும் பொதுக்கூட்டம் நாளை (22.01.2025) குளித்தலை, சுங்ககேட் பகுதியில் மாலை 6 மணி முதல் நடைபெற உள்ளது. அதிமுக குளித்தலை நகர கழக செயலாளர் சி.மணிகண்டன் தலைமை தாங்குகின்றார். குளித்தலை நகர மன்ற உறுப்பினர் ஆர். கணேசன் வரவேற்புரை வழங்குகின்றார். நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

News January 21, 2025

கரூரில் 157 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம்

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் வருகிற (26-ந்தேதி குடியரசு தினத்தன்று) மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2025-26ஆம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் பெறுதல் சம்பந்தமாக கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கிராம ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கிராமசபை கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

News January 21, 2025

கரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழி காட்டும் மையத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.  25-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு, 200-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து, முகாமில் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!