India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 2) விண்ணபிக்க <

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறை +91-44-22321090 / 22321085 / 22310989 / 22342142 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா புனவாசிப்பட்டி அடுத்த பள்ளபட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (58). இவர் நேற்று சின்னம்மநாயக்கன்பட்டி டாஸ்மாக் அருகே மது போதையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அப்பகுதியை சேர்ந்த நபர்கள் தகவல் தெரிவித்ததன் பேரில் வெள்ளியணை போலீசார் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது குறிஹ்து வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை!

கரூர் மாவட்டம், கடவூர் வடக்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் கன்னியப்பன் இன்று இயற்கை எய்தினார். இச்செய்தியை அறிந்த கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி எம்.எல்.ஏ, மறைந்த கன்னியப்பன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். இதே போல் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

சங்க காலத்தில் ‘வஞ்சி’ எனப் புகழ்பெற்ற கரூர், சேர மன்னர்களின் தலைநகராகவும் ரோமானியர்களின் வர்த்தக மையமாகவும் திகழ்ந்தது. கருவூர் தேவர் மற்றும் குலசேகர ஆழ்வாரால் பாடப்பட்ட இந்நகரம், சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.இங்குள்ள கல்வெட்டுகள் மற்றும் தொல்பொருள் சான்றுகள் நிறைந்த தமிழர்களின் கலாச்சார அடையாளமாகும். 1995-ல் இது தனி மாவட்டமாக உருவெடுத்தது.ஷேர் பண்ணுங்க!

கரூர் மாவட்ட மக்களே! இன்று மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கால்நடைகளுக்கு நன்றி செலுத்த உகந்த நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: காலை 9:30 – 10:30, மதியம் 1:30 – 2:30 மற்றும் மாலை 5:30 – 6:30. மாடுகள் இல்லாதவர்கள் சிவன் கோயிலுக்குச் சென்று நந்தி பகவானுக்குப் பூ மற்றும் பால் தானம் செய்து வழிபடலாம். உழவுக்குத் துணையிருக்கும் உயிரினங்களைக் கொண்டாடி மகிழ்வோம்!

கரூர் அரவக்குறிச்சி – ஆண்டிபட்டி சாலையில் பூபதி ஓட்டிய சொகுசு பேருந்து திடீரென பிரேக் பிடித்தது. அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மோகன் பிரசாத் (25), பேருந்தின் பின்புறம் பலமாக மோதி தலையில் காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளித்தலை ராச்சாண்டார்திருமலையில் நாளை (ஜனவரி 17) ஜல்லிக்கட்டு நடைபெறும். இதில் சுமார் 700 காளைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளது. மாடுபிடி வீரர்கள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பனியன்கள் வழங்கப்படும். காளைகளுக்கும், வீரர்களுக்கும் சுவாச பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் karur.nic.in இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கரூர் கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம், புகழூர் நகராட்சி, வார்டு எண் 16-க்கு உட்பட்ட செம்படாபாளையம் பகுதியில் பொங்கல் திருநாள் விளையாட்டு போட்டி நடைபெற்றது. அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த போட்டியில், புகழூர் நகர்மன்ற தலைவர் சேகர், மாவட்ட தொ.மு.ச தலைவர் V.R.அண்ணாவேலு, மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு அமைப்பாளர் நவாஸ்கான், நகர அவைத் தலைவர் வாங்கிலி, ஆகியோர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.