India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புகலூர் அடுத்து தவிட்டுப்பாளையம் காவிரி ஆற்று பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத 40 முதல் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதப்பதாக, அப்பகுதி மக்கள் கிராம அலுவலர் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த அலுவலர் மணிகண்டன், அடையாளம் தெரியாத ஆண் உடல் இருப்பதை உறுதி செய்தார். இதுகுறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊர்? என விசாரித்து வருகின்றனர்.
இன்று கரூர் வெங்கமேடு 4-வது வார்டு பகுதியில் பராமரிப்பு பணிக்காக சாலைகள் பறித்து போட்டு பல நாட்கள் ஆகியும் பணி மேற்கொள்ளாமல் உள்ளதை கண்டித்தும் சாக்கடை வசதி இல்லாதது மற்றும் குடிநீர் 20 நாளைக்கு ஒருமுறை மட்டுமே வருவதாக கூறி கரூர் சேலம் சாலையில் மரக்கிளைகளை வெட்டி போட்டு காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து வெங்கமேடு போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கரூர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு மாரியம்மன் கோவில் வைகாசி பெருவிழா முக்கிய நிகழ்வாக கம்பம் அமராவதி ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி மே.29ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதனால், புதன்கிழமை அன்று மட்டும் கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் அரசு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளுக்கு பதிலாக ஜூன் 8ஆம் தேதி அரசு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் கரூரில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு செய்திதாள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், புகழூர் தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலையின் சமுதாய நலப்பணித் திட்டத்தின் கீழ் ஐந்து பேருக்கு காகிதக்கூழ் பட்டயப்படிப்பு இலவசமாக வழங்கபடுகிறது. விருப்பமுள்ள மாணவர்கள், விண்ணப்பப் படிவங்களை கரூர் புகழூர், திருச்சி மொண்டிப்பட்டி ஆலைகளின் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை ஜூன் 10-க்குள் அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
கரூர் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று(மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
புகழூர் நகராட்சி அலுவலகம் முன் வாங்கல் வட்டார பொது சுகாதாரத்துறை சார்பில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பொறியாளர் மலர்கொடி முன்னிலை வகித்தார். வாங்கல் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன் வரவேற்றார். ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மருத்துவர் பொன்ராஜ் கலந்துகொண்டு, டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு விளக்க உரையாற்றினார்.
கரூர் அரசு வேலைவாய்ப்பு, தொழிற் பயிற்சி நிலையத்திற்கு சேர்க்கைக்கு நடைபெறுகிறது. இந்த https://skilltraining. tn. gov. in/DET/ எனற இணைய தளம் வழியே விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பங்கள் கடைசி நாள் (07.06.24). மேலும் கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை (04324-222111, 9499055711) என்ற எண்ணிற்கு தொலைபேசி வாயிலாக & நேரில் தொடர்பு கொள்ள என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு கரூர் மாவட்டத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கரூரில் அமைந்துள்ளது சோதிவடிமான அய்யர் மலை. இந்த மலைமீது இரத்னகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. புராணக்கதைகளைக் கொண்ட இத்தலத்தில் அப்பர் பாடல் பாடியுள்ளார். தேவாரத்தில் சோழநாட்டு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவதலமாக இது உள்ளது. இத்தலத்தின் சிவனின் முன்பு பொயுவாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது. 1140 படிகளுடன் இக்கோவில் மலை மீது அமைந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.