Karur

News January 22, 2026

கரூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!

image

கரூர் மாவட்டத்தில் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதை தொடர்ந்து, பொதுமக்கள் சட்டபூர்வமான திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்யுமாறு மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறுவதாக பொய்வாக்குறுதி வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏதேனும் தகவல் அல்லது புகார் இருப்பின் 1800 599 0050 (ம) 100 எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

News January 22, 2026

கரூர்: லைசன்ஸ், RC தொலைஞ்சிருச்சா..?

image

கரூர் மாவட்ட மக்களே.., உங்கள் வண்டியின் டிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே <>இங்கே கிளிக்<<>> செய்து Mparivaahan செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க

News January 22, 2026

கரூர்: இனி EB OFFICE போக வேண்டாம்!

image

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் <>இங்கே கிளிக் <<>>செய்து “TNEB Mobile App” பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

News January 22, 2026

கரூர்: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (ம) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 22, 2026

கரூர்: 8th போதும் அரசு டிரைவர் வேலை! APPLY NOW

image

கரூர் மக்களே, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும். ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <>க்ளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 04.02.2026 ஆகும். இதை வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க!

News January 22, 2026

கரூர்: வசமாக சிக்கிய மூவர் கைது

image

கரூர் மாவட்டத்தில் உள்ள வாங்கல் மற்றும் கரூர் நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்துள்ளனர். தகவல் அறிந்து நேற்று அங்கு சென்ற போலீசார் புகையிலை விற்ற ராமகிருஷ்ணன் 51, ஹரிராம் 29, பாலசுப்பிரமணி 41 ஆகிய மூன்று பேர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலைப் பொருட்களும் பறிமுதல் செய்தனர்.

News January 22, 2026

அறிவித்தார் கரூர் கலெக்டர்!

image

கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில், இ-சேவை மையம் வழியாக கட்டணமில்லா பேருந்து பயணச் சீட்டு பெறப் பதிவு செய்யப்படுகிறது. விடுமுறை தவிர்த்த வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தகுதியானவர்கள் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து விண்ணப்பிக்கலாம். இச்சலுகையைப் பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News January 21, 2026

குளித்தலை முன்னாள் எம்எல்ஏ காலமானார்!

image

குளித்தலை முன்னாள் எம்எல்ஏவும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான வெள்ளியணை ராமநாதன், வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். இவர் 1962 ஆம் ஆண்டு தமது 26 வயதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நின்றபோது அதிக வாக்கு வித்தியாசத்தில் குளித்தலை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957-ல் கருணாநிதி முதன்முதலாக குளித்தலை சட்டமன்ற வேட்பாளராக நின்ற போது வெள்ளியணை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

News January 21, 2026

கரூா் -சேலம் வழித்தட ரயில்களின் சேவையில் மாற்றம்

image

பொறியியல் பணிகள் காரணமாக, கரூா் – திருச்சி பயணிகள் ரயில் (76810), மறுமாா்க்கமாக திருச்சி – கரூா் பயணிகள் ரயில் (76809), திருச்சி – ஈரோடு பயணிகள் ரயில் (56105), மயிலாடுதுறை – சேலம் விரைவு ரயில் (16811), மறுமாா்க்கமாக சேலம் – மயிலாடுதுறை விரைவு ரயில் (16812), ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் (56810) ஆகிய ரயில்கள் வரும் 27 ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 21, 2026

JUST IN: கரூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும், வருகிற 26.01.2026 குடியரசு தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார். இக்கூட்டங்களில் ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், தணிக்கை அறிக்கை மற்றும் கொசு மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!