Karur

News February 1, 2025

கைநிறைய சம்பளம் – கரூரில் பணி நியமனம்

image

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் நிறுவனத்தில் மருத்துவ அதிகாரி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. MBBS / MD முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள் என கருதப்படுகிறது.விண்ணப்பிக்க இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.

News February 1, 2025

மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

image

கரூர் ராமானுஜம் நகர் தெற்கு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (55). இவர் அதே பகுதியில் புதிதாக கட்டடம் கட்டி வந்தார். இந்நிலையில் புதிய சுவருக்கு பைப் மூலம் தண்ணீர் அடிக்கும் பணியில் இருந்தார். அப்போது பைப் எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசியது. அதில் மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News January 31, 2025

தேசிய அளவில் சாதனை படைத்த கரூர் மாணவி

image

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்து ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் பரிசு தொகை ரூ 10000 பதக்கமும் பெற்று தமிழ்நாட்டிற்கும், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதிக்கும் பெருமை சேர்த்த புனித டோமினி மெட்ரிகுலேஷன் பள்ளி 9 -ம் வகுப்பு மாணவி கே.சத்யாவை குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

News January 31, 2025

துணை ராணுவத்தில் டிரைவர் வேலை

image

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் (CISF) காலியாக உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிரைவர், ஆப்பரேட்டர் பிரிவில் 1,124 காலிப்பணியிடங்கள் உள்ளன. 10 வகுப்பு தேர்ச்சி தகுதி போதும். ரூ.21,700- ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு, எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். <>விண்ணப்பிக்க கிளிக்<<>>, SHARE பண்ணுங்க

News January 31, 2025

கரூரில் குட்கா பொருள் கடத்திய மூவர் கைது

image

பெங்களுரூவிலிருந்து மதுரைக்கு கார் மூலம் குட்கா பொருள் கடத்துவதாக வெங்கமேடு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் தனிப்படை குளத்துப்பாளையம் மேம்பாலத்தில் வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது காருக்குள் 168 கிலோ எடைகொண்ட ரூ.1.32 லட்சம் மதிப்புள்ள குட்கா இருப்பது தெரியவந்தது. இதில் ராஜஸ்தான் மாநிலம் கேவர்சன்(40), ஹரிராம்(27), சுரேஷ்(19) ஆகிய 3 பேரையும் நேற்று கைது செய்தனர்.

News January 31, 2025

பஸ் டயர் வெடித்து விபத்து பெண் தொழிலாளி படுகாயம்

image

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ரேவதி (38). இவர் அரவக்குறிச்சியில் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிப்புரிந்து வருகிறார். இவர் பேருந்தில் மணல்மேடு அருகே சென்று கொண்டிருந்த போது பஸ்ஸின் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்கு உள்ளானது. இதில் ரேவதி படுகாயமடைந்தார். அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 30, 2025

கரூர் மக்களுக்கு எஸ்பி அறிவுரை!

image

கரூரில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியில் கரூர் எஸ்.பி, பெரோஸ்கான் அப்துல்லா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ நாட்டில் அதிகம் விபத்து நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் 2ஆம் இடத்தில் உள்ளது. சாலை விதிகளை பின்பற்றாமல், வாகனங்களில் செல்லும்போது தான் 70% விபத்துக்கள் நடக்கிறது. சாலை விதிகளை பின்பற்றினால் மட்டுமே இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடியும்” என்றார்.

News January 30, 2025

கரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

image

கரூர் மாவட்டம், ராயனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா (30)இவர், அரசு பள்ளியில், எட்டாவது வகுப்பு படித்து வரும், 14 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சதீஷ்குமார், மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் கிருஷ்ணா மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நேற்று கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

News January 30, 2025

கரூர் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை

image

கரூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.30) காய்கறி விலை நிலவரம்: தக்காளி ரூ.24, கத்தரி ரூ.30, வெங்காயம் ரூ.50, பச்சை மிளகாய் ரூ.40, இஞ்சி ரூ.50, சுரைக்காய் ரூ.15, வெண்டை ரூ.40, பச்சை அவரை ரூ.50, பீன்ஸ் ரூ.70, கேரட் ரூ.70, புடலங்காய் ரூ.40, உருளைக்கிழங்கு ரூ.50, முள்ளங்கி ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முட்டைக்கோஸ் ரூ.40, புதினா ரூ.60, கொத்தமல்லி ரூ.40, கருவேப்பிலை ரூ.90-க்கு விற்பனை ஆகிறது.

News January 30, 2025

கரூரில் கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

image

கரூர் மாவட்டத்தில் கோழி வெள்ளை காய்ச்சல் நோய் தடுப்பு முகாம் இலவச தடுப்பூசி வருகின்ற 01.02.25 முதல் 14.02.25 வரை மாவட்டத்திற்கு 2.15 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே கால்நடை மருத்துவமனை, மருந்தகம், கிளை நிலையங்கள் தடுப்பூசி பெற வேண்டியவர்கள் விவசாயிகள், கோழி வளர்ப்போர் கட்டாயம் பயன்பெற வேண்டும் மேலும் அனைத்து கால்நடை நிலைகளிலும் கிடைக்கும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!