Karur

News May 30, 2024

கரூரில் பணம் வைத்த சூதாடிய 40 பேர் கைது

image

கரூர் டவுன் போலீசார் உழவர் சந்தை பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தனியார் திருமண மண்டபம் அருகே கரூர், திருப்பூர் பகுதிகளை சேர்ந்த மோகன்ராஜ்(41), வெங்கடேஷ்(41), சதீஷ்குமார்(45), கணேசன்(34), கந்தசாமி(34), அபுதாகிர்(29), நாராயணன் (47), உட்பட 40 பேர் பணம் வைத்து சூதாடியுள்ளனர். இதனையடுத்து 40 பேரையும் போலீசார் கைது செய்து ரூ.2.11 லட்சம் பணத்தினையும் பறிமுதல் செய்தனர்

News May 29, 2024

கரூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை!

image

கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு கரூர் மாவட்டத்திற்கு இன்று (மே.29) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (மே.29) விடுமுறைக்கு பதிலாக ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்து கரூர் ஆட்சியர் தங்கவேல் உத்தரவிட்டுள்ளார்.

News May 29, 2024

பாதுகாப்பு பணிக்கு போலீசார் வருகை

image

கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவில் முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றில் விடும் விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பணிக்காக திருச்சி, உளுந்தூர்பேட்டை, வேலூரில் இருந்து சிறப்பு காவல் படையினர் 125 பேர் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த 600 போலீஸாருடன் உள்ளூர் போலீஸார் 300 பேரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி தெரிவித்துள்ளார்.

News May 28, 2024

கரூர்: மாவட்ட தேர்தல் அலுவலர் நேரில் ஆய்வு

image

தளவா பாளையம் தனியார் பொறியல் கல்லூரியில், இன்று மாவட்ட தேர்தல் அலுவலர் தங்கவேல், வாக்கு எண்ணும் மையத்தில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தொடர்பு துறை அலுவலர்கள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

News May 28, 2024

கரூர் பொன்னணியாறு அணை சிறப்புகள்!

image

கரூர், கடவூர் மலைப்பகுதியில் அமைந்துள்ளது பொன்னணியார் அணைக்கட்டு. இந்த அணை செம்மலையின் அடிவாரத்தில் பெருமாள் மலைகளுக்கு இடையில், தும்பச்சி, மாமுண்டி, அறியாறு போன்ற ஆறுகளில் வெள்ளக்காலத்தில் ஏற்படும் நீர்ப்பெருக்கைத் தடுக்க 1975-ஆம் ஆண்டு இந்த அணை கட்டப்பட்டது. பாசன வசதிக்காக கட்டப்பட்ட இந்த அணை, பொதுப்பணித்துறையால் பாதுகாக்கப்படுகிறது. 313 ஏக்கர் பரபபளவில் அமைந்துள்ள அணையின் உயரம் 51அடிகள் ஆகும்.

News May 27, 2024

கரூர்: பாலத்தில் இருந்து குதித்த திருடர்களுக்கு கால் முறிவு

image

கரூர் நகர போலீசார் கோதை நகரில் நேற்று(மே 26) ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது பைக்கில் வந்த இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வெங்கமேட்டை சேர்ந்த பரணிபாண்டி, மோத்தீஸ் என்பதும், இருவரும் முதியவரை தாக்கி பைக்கை பறித்தும், பெண்களிடம் நகை பறித்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்ய முயன்றபோது தப்பித்து செல்ல பாலத்திலிருந்து குதித்ததில் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News May 26, 2024

வழி தவறிய குழந்தை பெற்றோரிடம் ஒப்படைப்பு

image

கரூரில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வரும் சரவணன்-மோனிகா தம்பதியரின் 2 வயது குழந்தை பெரிஸ் பிளாசா வளாகத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். இதில் குழந்தை தனியாக கோவை சாலையில் வந்ததை கண்ட போக்குவரத்து காவலர்கள் மீட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது குழந்தையை தேடிக் கொண்டிருந்த அவர்களை மகளிர் காவல் நிலையத்துக்கு வரவழைத்து அறிவுரை வழங்கி குழந்தையை பெற்றோரிடம் நேற்று ஒப்படைத்தனர்.

News May 26, 2024

கரூர் அருகே 6 பேர் கைது

image

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா துளிப்பட்டியில் உள்ள நாடக மேடையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவல் அறிந்த லாலாபேட்டை போலீசார் சூதாட்டத்தில் ஈடுபட்ட மணிகண்டன், கருப்பையா, காளியப்பன், இளங்கோவன், சக்திவேல், கைலாசம் ஆகிய 6 பேர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். மேலும் 52 சீட்டுகள், ரூ.150 பறிமுதல் செய்தனர்.

News May 26, 2024

கரூர்: அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் அணி நிர்வாகி

image

கரூர் அதிமுக அலுவலகத்தில், 6 வது வார்டு, வெங்கமேடு OPS அணியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளராக இருந்த எ.செந்தில் குமார் OPS அணியில்  இருந்து விலகி, நேற்று முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் பசுவை சிவசாமி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News May 25, 2024

கரூர்: 20 நபர்கள் மீது வழக்கு பதிவு

image

கரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்திற்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் மாவட்ட முழுவதும் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்ட பொழுது 20 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து, விற்பனைக்கு வைத்திருந்த 240 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். காவல்துறையினர் இதுகுறித்து தகவலை இன்று வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!