Karur

News August 10, 2024

கரூரில் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆட்சியர் அழைப்பு

image

கரூர் மாவட்டத்தில் குளித்தலை , தோகைமலை, கடவூர், கிருஷ்ணராயபுரம் ஆகிய வட்டாரத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகள் குளித்தலை அரசு பொது மருத்துவமனையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய் கிழமை தொடர்ந்து நடைபெற்று வரும் மருத்துவ முகாம்களில் மாற்றுத்திறனாளி என்பதற்கான மருத்துவச் சான்றிதழ் பெற 04324-257130 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 10, 2024

கரூரில் வேலைவாய்ப்பு முகாம் ஆட்சியர் அறிவிப்பு

image

கரூரில் வேலைவாய்ப்பு முகாம் ஆக.16 வெள்ளியன்று வெண்ணைமலையில் கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 2.00 மணிவரை நடத்தப்படவுள்ளது. 25க்கும் மேற்பட்ட தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இளைஞர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News August 10, 2024

கரூரில் கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை லேசான முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியால் கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News August 10, 2024

கரூரில் 26.00 மி.மீ மழை பொழிவு

image

கரூர் மாவட்டத்தில் நேற்று பெய்த மழையானது மொத்தம் 26.00 மில்லி மீட்டர் பெய்ததாக மாவட்ட நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. இதில் அதிகபட்ச மழை பொழிவாக அணைப்பாளையத்தில் 12.20 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 5.60 மில்லி மீட்டர், கரூரில் 5.20 மில்லி மீட்டர், மாயனூரில் 3.00 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

News August 10, 2024

கரூரில் 13 சப் இன்ஸ்பெக்டர்கள் திடீர் மாற்றம்

image

கரூரில் 13 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பசுபதிபாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப் – இன்ஸ்பெக்டர் பானுமதி கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷினி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்திற்கும் என 10 பேர் உள்பட மொத்தம் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News August 10, 2024

கரூர் வழியே வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

image

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சேலம், நாமக்கல், கரூர் வழியே சிறப்பு ரயில் அறிவிக்கப்ட்டுள்ளது. அதன்படி வாஸ்கோடமா – வேளாங்கண்ணி சிறப்பு ரயில் ஆக. 27, செப். 2,6 ஆகிய நாட்களில் இரவு 9.55க்கு புறப்பட்டு பெங்களூர், சேலம், நாமக்கல், கரூர் வழியே 2ம் நாள் நள்ளிரவு 1.30க்கு வேளாங்கண்ணியை அடையும்.

News August 9, 2024

கரூரில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

image

கரூரில் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை (10.08.2024) பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பள்ளிக் கல்வி இயக்குநரின் அறிவுரைகளின்படி மேற்படி வேலை நாள் இரத்து செய்யப்பட்டு விடுமுறை என அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் முதன்மை கல்வி அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

சவுக்கு சங்கர் வழக்கில் இன்று தீர்ப்பு

image

சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை எதிர்த்த வழக்கில் இன்று சவுக்கு சங்கர் தாய் கமலா மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம்,வி.சிவஞானம் அமர்வு தீர்ப்பளிக்கிறது.

News August 9, 2024

கரூர்: வயதான தம்பதியின் வீட்டை சுற்றி போட்ட முட்கள் அகற்றம்

image

கரூர் கிராயூர் கிராமத்தை சேர்ந்தர் சின்னசாமி. இந்நிலையில் வாங்கல் ஊராட்சி சார்பில் தார் சாலை அமைக்க 50 சென்ட் நிலத்தை கேட்டதற்கு சின்னசாமி தர மறுத்துள்ளார். இதனால் கடந்த ஏப்.3ம் தேதி சின்னசாமி வீட்டை சுற்றியும் முட்களை வெட்டி போட்டு வெளியே வராதவாறு தடுத்துள்ளனர்.அது குறித்த வீடியோ வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அவர்களது வீட்டை சுற்றி போட்டிருந்த மூட்கள் அகற்றப்பட்டன.

News August 8, 2024

கரூரில் பாஜக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

image

கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் அக்கட்சியினர் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். அப்போது, சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடு தோறும் தேசிய கொடியேற்றுதல், அன்னை பெயரில் அனைவரும் மரக்கன்று நடுதல் மற்றும் மாவட்டம் முழுவதும் வீடு தோறும் வாக்காளர்களை சந்திக்கும் நிகழ்ச்சியும் வெற்றிகரமாக நடத்துவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டது.

error: Content is protected !!