India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
கரூர் மாவட்டத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, கரூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து டாஸ்மாக் மற்றும் டாஸ்மாக்குடன் இணைந்து செயல்படும் பார்களும் நாளை ஒரு நாள் மூட வேண்டுமென கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விதி மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்
தமிழகத்தில் கடந்த சில நாட்காக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, கரூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால் மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்தில் கனமழை பெய்து வருவதால் கரூர் அமராவதி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வருவதால் கரையோர பகுதிகளில் சிறுவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட எவரும் நீரில் இறங்கி குளிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ, முற்றிலும் தவிர்க்குமாறு கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவித்தார்.
➤கரூரில் முதலமைச்சர் கோப்பை www.sdat.tn.gov.in விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவிப்பு
➤கரூர் மாவட்டத்தில் 163 மில்லி மீட்டர் மழை பதிவு
➤மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
➤நாளை மின்தடை : வெள்ளியணை பகுதி -தாளிப்பட்டி , சமத்துவபுரம், வீரணம் பாளையம் செல்லாண்டிபட்டி , கல்லுமடை காலனி, வெங்கமேடு பகுதி-வெண்ணைமலை, பசுபதிபாளையம், பூலாம்பாளையம் ,மன்மங்கலம், செம்மடை சிட்கோ, மன்மங்கலம்
தமிழகத்தில் வளிமண்டலத்திலுள்ள கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் இன்று கரூரில் ஒரு சில பகுதியில் லேசான முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதனால் கரூர் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்
கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் மாதாந்திர பணி மேற்கொள்வதால், வெள்ளியணை பகுதி -தாளிப்பட்டி , சமத்துவபுரம், வீரணம் பாளையம் செல்லாண்டிபட்டி , கல்லுமடை காலனி, வெங்கமேடு பகுதி-வெண்ணைமலை, பசுபதிபாளையம், பூலாம்பாளையம் , மன்மங்கலம், செம்மடை சிட்கோ, மன்மங்கலம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அங்கு மனு அளிக்க வந்த வெங்கமேட்டை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபு என்பவர் பெட்ரோலை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனடியாக போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து பாபு கூறுகையில் “எனக்கு வீடு கட்டித் தரக்கோரி பலமுறை மனு கொடுத்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றார்.
தமிழ்நாடு அரசு நடத்தும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான முதல் ஆய்வுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் இருந்து தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் பங்கு பெற ஆகஸ்ட் 25க்குள் உடனே www.sdat.tn.gov.in இணையத்தில் பதிவு செய்ய ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
#மணவாடி அருகே சடலமாக மீட்கப்பட்ட சித்தாள்- போலீஸ் விசாரணை
#கரூரில் 265.20 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது.
# வரும் 30ஆம் தேதிகுள் திருக்குறள் போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்தார்.
#கரூர் மாவட்ட கிராம கோயில் பூசாரிகள் நலச்சங்கம் மாநாடு இன்று நடைபெற்றது.
#கரூரில் அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களிலும் போதைப்பொருள் விழிப்புணர்வு நடத்தப்பட்டது.
Sorry, no posts matched your criteria.