India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர், காந்திகிராமம் எழில் நகர் பகுதியில் வசித்து வந்த சசிகுமார் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்து மாத்திரை உட்கொண்டு வருகிறார். நேற்று வலி தாங்க முடியாமல் அவர் வீட்டிலேயே தூக்கு மாட்டி மாண்டு போனார். இது குறித்து அவரது மனைவி புகார் கொடுத்ததன் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேலாயுதம்பாளையம் போலீசார் ரோந்து பணிகளை ஈடுபட்டிருந்தனர். அப்போது டூவீலரில் வந்த பரமத்தி வேலூர் பாப்பன தோட்டத்தை சேர்ந்த ராமசாமியை சோதனை புகையிலை பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து குந்தாணி பாளையத்தில் உள்ள ராமசாமி வீட்டின் காரில் 365 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததுடன், ராமசாமியையும் வேலாயுதம் போலீசார் கைது செய்தனர்.

IOCL ஆனது Junior Attendant உள்ளிட்ட 246 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி / ITI / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பணியின் அடிப்படையில் ரூ.23,000/- முதல் ரூ.1,05,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும். விணப்பிக்க இங்கே<

கரூர் மாவட்டத்தில் காவல்துறையில் 25 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 05 காவல் அலுவலர்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படும் அதி ‘உத்கிரிஸ் சேவாக்’ பதக்கமும் மற்றும் 20 வருடம் எவ்வித தண்டனையும் இல்லாமல் பணிபுரிந்த 04 காவல் அலுவலர்களுக்கு ‘உத்கிரிஸ் சேவாக்’ பதக்கத்தை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா IPS அவர்கள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆயுதப்படையில், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் இன்று கவாத்து பயிற்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்துகொண்டு நேரில் பார்வையிட்டார். அப்போது காவலர்களின் நிறைகுறைகளை கேட்டறிந்தார்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் “My v3ads” நிறுவனம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது. பின் மோசடி புகாரால் நிறுவனத்தின் செயல்பாடுகள் முடக்கப்பட்ட நிலையில், ஏமாற்றம் அடைந்தவர்கள் காலம் தாமதிக்காமல் புகார் அளிக்கலாம் என கேட்டுக்கொண்டனர். எனவே, கரூர் மக்களே இதில் ஏமாற்றம் அடைந்திருந்தால் உடனே புகார் அளிக்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.02.2025) காலை 10.00 மணி அளவில் மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், கூடுதல் வகுப்பறை கட்டிடத்தினை காணொளி காட்சி வழியாக திறந்து வைக்க உள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழக பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அண்மை காலமாக பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த நிலையில், மாணவ, மாணவிகள் மனம், உடல், பாலியல் சார்ந்த துன்புறுத்தல்களுக்கோ
,அச்சுறுத்தல்களுக்கோ உள்ளாக்கப்பட்டு வந்தால் 14417 என்ற எண்ணில் இலவச உதவி மையத்தை தொடர்பு கொள்ள பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்வேயில் 32,438 குரூப் டி காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி கடைசி நாள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது மார்ச் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பிக்க இங்கே <

கரூர் மாவட்டம் க.பரமத்தி அருகே முன்னூர் கிராமம் கிரசர்மேடு பகுதியில் நேற்று போர்வெல் வேலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அலட்சியமாக போர்வெல் லிப்டை தூக்கிய போது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே போர்வெல் லாரி ஓட்டுநர் சதீஷ் 38 , லாரி உரிமையாளர் பாலசுப்பிரமணியன் 48 ஆகிய இருவரும் உயிரிழந்தனர். க.பரமத்தி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை.
Sorry, no posts matched your criteria.