Karur

News July 7, 2024

சிக்கலில் கரூர் மாஜி அமைச்சர்..!

image

நிலமோசடி தொடர்பாக அ.தி.மு.க மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில், கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2வது முறையாக முன்ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News July 6, 2024

நீதிமன்றத்தில் வீடியோ எடுத்த நபர் கைது

image

கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தை செல்போன் மூலம் வீடியோ எடுத்த தமிழினியன் என்ற இளைஞர் லைவாக வீடியோ அனுப்பி கொண்டிருந்ததை கண்டறியப்பட்டது. இதையடுத்து தமிழினியனை பிடித்து மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் முன்பு ஆஜர் படுத்தினர்.

News July 5, 2024

குரூப்.1 தேர்வை 2,850 பேர் எழுதுகின்றனர்

image

குரூப்.1 தேர்வில் காலியாகவுள்ள 90 துணைக் காவல் கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளுக்களுக்கு விண்ணப்பிக்க மார்ச்.28 இல் அறிவிப்பு வெளியானது. கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையத்தால் நடத்தப்படும் குரூப்.1 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத்தேர்வு ஜூலை.13 இல் நடைபெற உள்ளது. இதற்காக மாவட்டத்தில் 11 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 2,850 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.

News July 5, 2024

சிபிசிஐடி அதிகாரிகள் சோதனை

image

ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்ததாக யுவராஜ்.செல்வராஜ், ரகு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உட்பட 13 பேர் தேடப்பட்டு வருகின்றனர்.இதில் கரூர் தாளப்பட்டியில் உள்ள யுவராஜ், தோட்டக்குறிச்சியில் உள்ள செல்வராஜ் வீடு உள்ளிட்ட 3 இடங்களில் 1 மணி நேரத்திற்கும் மேலாக சிபிசிஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News July 4, 2024

முன்னாள் அமைச்சர் ஜாமீன் மனு; நாளை ஒத்திவைப்பு

image

கரூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் இடைக்கால முன்ஜாமீன் மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி சண்முகசுந்தரம் இடைக்கால முன்ஜாமீன் மனு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நாளை ஒத்திவைத்துள்ளார்.

News July 4, 2024

கரூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

image

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணாமாக தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கரூர் மாவட்டத்தில் இரவு 8.30 வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 4, 2024

முன்னாள் அமைச்சர் மீதான வழக்கிற்கு இன்று தீர்ப்பு

image

கரூா் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நிலத்தை மிரட்டி எழுதி வாங்கியதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 3 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்நிலையில் தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை அருகிலிருந்து கவனிக்க முன்பிணை கோரி கரூர் கோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். அந்த மனுவின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்குவதாக கோர்ட் அறிவித்துள்ளது.

News July 3, 2024

கரூர்:முன்னாள் அமைச்சர் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

image

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது கடந்த ஜூன்- 9 ஆம் தேதி மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர்அளித்த புகாரின் பேரில் விஜயபாஸ்கர் மீது புகாரளிக்கப்பட்டது.இதனையடுத்து விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு ஜூன்-12 அன்று மனுதாக்கல் செய்தார். இதன்பிறகு தலைமறைவான அவர் நேற்று முன்தினம் இடைக்கால முன்ஜாமீன் கோரியிருந்தார்.இந்த முன்ஜாமீன் மனு குறித்தான தீர்ப்பு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது .

News July 3, 2024

கரூர் ஆட்சியர் முக்கிய தகவல்

image

கரூர் ஆட்சியர் தங்கவேல் இன்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தில், கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் நடைபெற்றது. இதில் விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10ஆம் தேதி வரை அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

News July 2, 2024

கரூரில் பாஜக கட்சியின் சார்பில் ஆய்வு கூட்டம்

image

கரூர் VNC மஹாலில் பாஜக கட்சியின் சார்பில் நாடாளுமன்றத் தேர்தல் சம்பந்தமான ஆய்வு கூட்டம் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கு ஆலோசனை வழங்கினார். உடன் தேர்தல் பொறுப்பாளர்கள் வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!