India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். <

கரூர் வாங்கல் அருகே காவிரியாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளிய 3 பொக்லைன் மற்றும் ஒரு லாரியை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சிறைபிடித்தார். பின்னர் பேசிய அவர், “அரசு அனுமதியின்றி தினமும் 300 லாரிகளில் ₹3 கோடிக்கு மணல் கடத்தப்படுகிறது; இதில் திமுகவினருக்குத் தொடர்புள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர், எஸ்.பி., ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை” எனத் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம் அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் M.D.A துரைமுருகன் அக்கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் தங்களை அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வின் போது மாவட்ட அமைப்பாளர் பூவை ரமேஷ் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் .

கரூர் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். கரூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04324-296570, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

பிப்ரவரி 10 இன்று கரூர் தபால் தலைமை நிலையம் அருகில் திமுக ஆட்சியில் தினம் தினம் பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை கண்டித்து கரூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பாக மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பி வி செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி தலைவி பிரியா ஈஸ்வரன் வரவேற்புரை ஆற்றினார். மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கரூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு இங்கு <

கரூர் மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் <

திருச்சி, பெரிய அணைகரைபட்டியை சேர்ந்தவர் திருஞானம். இவர் நேற்று தனது ஸ்கூட்டரில் தாயார் சரோஜாவை பின்னால் அமர வைத்து கொண்டு கோடங்கிபட்டி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்த போது பின் வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியதில் தாய் மகன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12-ம் தேதி (12.02.2026) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மண்டல அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ-களில் பயிற்சி முடித்தவர்கள் இதில் பங்கேற்கலாம் என கரூர் கலெக்டர் மீ.தங்கவேல் அறிவிப்பு!
Sorry, no posts matched your criteria.