India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் க.பரமத்தி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று, அதிகபட்ச வெப்பநிலை 96.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, குறிப்பாக மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை, அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டாம்.

கரூர் : குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், அரவக்குறிச்சி, மன்மங்கலம், புகலூர், ஆகிய பகுதிகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்பு முகாம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் வருகிற ஏப்.12ஆ தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. ஆகவே பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமில் கலந்து கொண்டு பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்றவற்றை பயன்படுத்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மாரியம்மன் என்றால் எலோருக்கும் ஞாபகம் வருவது சமயபுரம் மாரியம்மன் தான். ஆனால், அதற்கு சற்று அருகில் உள்ள கரூர் மாரியம்மன் கோயிலுக்கும் பல தனிச் சிறப்புகள் உண்டு. இந்தக் கோயிலில் வழங்கப்படும் திருநீறு மருத்துவ குணம் வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இதை நெற்றியில் பூசிக் கொண்டால் கண், தலை, தோல் சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. பிரச்சனை உள்ள நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

கரூரில் எவ்வித வேலை வாய்ப்பும் கிடைக்காமல் 5ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு மாதம் ரூ.600 முதல் ரூ.1800 வரை உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுவதற்கு <

புன்னம் பகுதியை சேர்ந்த பொத்தான் என்பவரது மனைவி பார்வதி, (55) இவர் பழமாபுரம் பகுதியில், சேகர் என்பவரது தேங்காய் தோட்டத்தில், வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கரூர்: வருகிற ஏப்.10ஆம் தேதி ‘மகாவீர் ஜெயந்தி’-யை முன்னிட்டு மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், FL2 மற்றும் FL3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் உலர் தினமாக அனுசரிக்கப்பட வேண்டும் எனவும், அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலையில் அமைந்துள்ள கல்யாண வெங்கடரமணர் கோயில் மிகவும் புகழ்பெற்றது. 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயிலுக்கு நீண்ட தல வரலாறும் உண்டு. தென்நாட்டின் திருப்பதி எனப் போற்றப்படும் இந்தக் கோயிலை வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. மேலும், செருப்புகளை காணிக்கையாகத் தரும் வழக்கமும் இக்கோயிலில் உண்டு.

கரூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறுகிறது. ▶️முதன்மை அங்கன்வாடி பணியாளர் – 3 இடங்கள் ▶️குறு அங்கன்வாடி பணியாளர் – 14 இடங்கள்▶️அங்கன்வாடி உதவியாளர் – 44 இடங்கள் நிரப்படவுள்ளது. ஊதியமாக ரூ.7700 முதல் 24200 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <

கரூர் வாங்கல் வஉசி தெருவை சேர்ந்தவர் தென்னரசு (33). இவர் நேற்று சங்க கொட்டாய் முனியப்பன் கோவில் அருகே உள்ள பனைமரத்தில் ஏறி உள்ளார். அங்கு மரத்தில் மேலிருந்த .தேனீ கடித்ததில் அங்கிருந்து கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. அவரின் மனைவி பிரியங்கா புகாரின் பேரில் வாங்கல் போலீசார் நேற்று வழக்கு பதிவு.

திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து காலை 07.20 மணிக்கு புறப்படும் ரயில் எண்.56809 திருச்சிராப்பள்ளி – ஈரோடு பயணிகள் ரயில், ஏப்ரல் 08 & 11, 2025 அன்று கரூர் ரயில் நிலையத்தில் குறுகிய பயண நிறுத்தம் செய்யப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளி சந்திப்பிலிருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்; அந்த நாட்களில் கரூரில் இருந்து ஈரோட்டுக்கு இயக்கப்படாது. என ரயில்வே அதிகாரி அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.