India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே பிரசித்தி பெற்ற புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக முருகன் விற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமணத்தடை விலகி இல்லற வாழ்க்கை விரைவில் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

கரூரில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 206 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நியமனம் செய்யப்படவுள்ளது. இப்பணிக்கு, 21 முதல் 40 வயதுடைய பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்களுக்கு <

கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களைச இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை.

கரூர்: தாந்தோன்றிமலை பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி நேற்று(ஏப்.10) கல்லூரிக்குச் செல்லும் வழியிலேயே கடத்தப்படார். இதுகுறிது போலீசார் விசாரணையில் அவரைக் கடத்தியது அவரது காதலன் நந்தகோபாலின் குடும்பத்தினர் எனத் தெரியவந்தது. மாணவி வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் தராததால் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து மாணவியை மீட்டு விசாரிக்கின்றனர்.

கரூர் மாவட்ட பாரா தடகள விளையாட்டு வீரர் ஜீவானந்தம் நடந்து முடிந்த பாரா தடகள போட்டியிலும் மற்றும் பாரா கேலோ இந்தியா போட்டியிலும் தங்கம் வென்றார். அவரை ஊக்குவிக்கும் விதமாக நேற்று சென்னையில் துணை முதல்வர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் உயரிய ஊக்கத்தொகை ரூபாய் 3 லட்சம் வழங்கினார். கரூர் தடகளத்தில் தடம் பதிக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

புகழூரை அடுத்து தட்டாங்காடு பகுதியைச் சோ்ந்த கொத்தனார் மணி (42) மனைவி தேனம்மாள் (40) இவா்களுக்கு 1 மகன், 2 மகள்கள் உள்ளனா். இருவரும் வருகின்றனா். இதில் மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி மணி தகராறு செய்தாக வீட்டின் முன் கிடந்த கல்லை எடுத்து தேனம்மாள் தலையில் போட்டுள்ளார். இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் அளித்து நேற்று மணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனா்

கரூர் மாவட்டத்தில் உள்ள 28 நீர்நிலைகளில் இருந்து விவசாய பயன்பாட்டிற்கும், மட்பாண்ட தொழிலுக்கும் தேவையான வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எவ்வித கட்டணமும் இன்றி வெட்டியெடுத்துச் செல்லலாம். இதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் மற்றும் மட்பாண்ட தொழிலாளர்கள் தங்களது அருகிலுள்ள இ-சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் இணையதள வழியில் விண்ணப்பித்து பயனடையுமாறு ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு அக்னி வீர் திட்டத்தின் கீழ் 10,12 ஆம் வகுப்பு படித்த இளைஞர்களுக்கு பொதுப்பணி, டெக்னிக்கல், கிளார்க், டிரேட்ஸ்மென் பிரிவுகளில் ஆட்சேர்ப்பு நடைபெறவுள்ளது.இதற்கு மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படுகிறது. இதில் விண்ணப்பிக்க இன்றே (ஏப்.10) கடைசி நாள். விண்ணப்பிக்க <

▶️மாவட்ட ஆட்சித் தலைவர் – 04324-257555 ▶️மாவட்ட காவல் கண்காணிப்பாளர் – 04324-296650
▶️பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்- 04324-255305 ▶️மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் 04324-256508 ▶️மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் 04324-256728 ▶️மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் – 04324-223555 மிக முக்கிய எண்களான இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.

கரூர் மாவட்டத்தில் நாளை மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுவதை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் FL2 உரிமம் பெற்ற ஹோட்டல் பார்கள் அனைத்தும் மூடப்படும் என்று கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை உத்தரவை மீறி மதுபான விற்பனையில் ஈடுபடும் மதுக்கூடத்திற்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.