India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கரூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை சிகிச்சை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் குடும்ப அட்டை, ஆதார் மற்றும் வருமானச் சான்றிதழுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மையத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு 1800 425 3993 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

கரூர் மக்களே சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வடவம்பாடி கிராம நிர்வாக அலுவலர் (VAO) சிவக்குமார், பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒருவரிடம் ரூ.10,000 லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அவரை கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

கரூர் மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம். 1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம். 2) அல்லது <

கரூர் மாவட்டம் கடவூர் இடையபட்டி பூசேர்ந்தவர் அம்மையப்பன் (55) கடந்த 6 வருடங்களாக உடல் நலக் குறைவால் வீட்டில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் படுத்திருந்தபோது புகை பிடித்ததில் எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து காயம் அடைந்தார். காயமடைந்த அவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவரது உறவினர் பூவரசன் புகாரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

கரூரில் அனைத்து தாலுகாக்களிலும் இன்று (பிப்.14) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெறுகிறது. கரூர், அரவக்குறிச்சி உட்பட 7 வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும் இம்முகாமில், பெயர் திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய அட்டை கோரி விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி முகாம்களில் பங்கேற்று குறைகளை நிவர்த்தி செய்யுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். SHAREIT

கரூர் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இரவு நேர ரோந்துப் பணிக்குச் சிறப்பு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்ட ஒழுங்கைப் பராமரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்கள் தங்கள் பகுதி காவல் அதிகாரிகளை நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sorry, no posts matched your criteria.