India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதத்தில் மண்ணை அள்ளி வீசினார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்ட குமரி மாவட்டத்தை சார்ந்த இளைஞர் பிரதீஸ் என்பவரை கைது செய்ததை கண்டித்து பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
குமரி எஸ்.பி சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவர்” என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி நாகசங்கர் குமரி மாவட்ட சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதை போன்று சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கலையரசன் குமரி மாவட்ட தலைமை இடத்து ஏ.டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. இவர்கள் விரைவில் கன்னியாகுமரி மாவட்ட ஏடிஎஸ்பிகளாக பதவி ஏற்க உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 58 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு ஏற்கனவே 5 சொத்து கால்நோய் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆறாவது சுற்றில் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அடுத்த மாதம் மூன்றாம் தேதி முதல் 28 நாட்கள் இந்தப் பணி நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று(டிச.27) தெரிவித்தார்.
1.சென்னை பல்கலைக்கழக மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை கண்டித்து நாகர்கோவில் மாநகராட்சிபூங்கா முன்பு SFIஆர்ப்பாட்டம் நடக்கிறது. 2.அதிமுக சார்பில் மாணவி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதை கண்டித்து மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது.3.அமித்ஷாவை கண்டித்து நாகர்கோவிலில் விசிக சார்பில் தர்ணா போராட்டம் நடக்கிறது.
பிள்ளைத்தோப்பு மீனவர் ஆன்றோ ஆரோக்கியம் ராஜ்(43). இவர் திருச்சியை சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். முதல் கணவருக்கு பிறந்த மகளுடன் வசித்து வந்த நிலையில், சிறுமிக்கு ஆன்றோ ஆரோக்கியம் ராஜ் பாலியல் தொந்தரவு அளித்து வந்துள்ளார். கடந்த 26ம் தேதி இரவு மனைவி, மகளை மது அருந்த வற்புறுத்தவே இருவரும் தப்பித்து வெள்ளிச்சந்தை போலீசில் புகார் அளித்தனர். போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார்.
குமரியில் விவேகானந்தர் நினைவு பாறைக்கு தினமும் காலை 8 மணிக்கு படகு போக்குவரத்து ஆரம்பமாகும். வரும் 30ம் தேதி காலை 6 மணிக்கே படகு போக்குவரத்து துவங்கி 12 மணிக்கு முடிகிறது. “திருவள்ளுவர் சிலை 25-ம் ஆண்டு வெள்ளிவிழாவை முன்னிட்டு வரும் டிச.30 அன்று படகு போக்குவரத்து பயணச்சீட்டு காலை 06.00 மணிக்கு தொடங்கி மதியம் 12.00 மணி வரை வழங்கப்படும்” எனபூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று காலமானதைத் தொடர்ந்து ஏழு நாள் அரசு துக்க அனுசரிக்கப்படும் என்றும் அரசு விழாக்கள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30ஆம் தேதி தொடங்கி 1ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மன்மோகன் சிங் மறைவு காரணமாக இந்த விழா நடக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஈரடியில் பேரறிவு தந்த ஐயன் வள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் தலைமையில் குமரியில் வெள்ளிவிழா டிசம்பர் 30, 31 & ஜனவரி 01 ஆகிய தினங்களில் நடக்கிறது. இவ்விழாவில் திமுகவினர் உட்பட அனைத்து பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சரும், குமரி மேற்கு மாவட்ட திமுக செயலாளருமான மனோ தங்கராஜ் எம்எல்ஏ அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 2ஆம் நாள் நிகழ்ச்சியாக, டிச.31ஆம் தேதி காலை 11:30 மணிக்கு கருத்தரங்கு நடைபெறுகிறது. அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பேராசிரியர் கருணானந்தன், கரு பழனியப்பன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் அருள்மொழி, பேராசிரியர் விஜய சுந்தரி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.
Sorry, no posts matched your criteria.