Kanyakumari

News January 3, 2025

விஜய் வசந்த எம்.பி நாளைய நிகழ்ச்சி

image

குமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் நாளை காலை 8.30 மணிக்கு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார். மதியம் 3 மணிக்கு நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கில் கைப்பந்து போட்டியை தொடங்கி வைக்கிறார். மாலை 5 மணிக்கு களியக்காவிளையில் உணவு திருவிழாவை தொடங்கி வைக்கிறார். மாலை 6 மணிக்கு கருங்கல்லில் மௌன ஊர்வலத்தில் பங்கேற்கிறார்.

News January 3, 2025

தாம்பரம் – கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில்

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரம் கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அதன்படி இம்மாதம் 13 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்தும், 14ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்தும் இந்த ரயில் இயக்கப்படுகிறது .செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், சிதம்பரம், சீர்காழி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, கோவில்பட்டி, நெல்வேலி நாகர்கோவில் வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது.

News January 3, 2025

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த 52 குழுக்கள் அமைப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கால்நோய் வாய் நோய் தடுப்பூசி பணி 5 சுற்றுகள் நடந்துள்ளது. ஆறாவது சுற்றில் 58 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர்களைக் கொண்ட 52 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று தெரிவித்தார்.

News January 3, 2025

பச்சை தமிழகம் கட்சி த.வா.க-வுடன் இணைப்பு

image

பச்சைத் தமிழகம் கட்சி தலைவர் சு.பஉதயகுமார் இன்று(ஜன.3) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பச்சை தமிழகம் கட்சி, வேல்முருகன் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது; தமிழர்களை ஆபத்துக்குள் தள்ளும் அழிவுத் திட்டங்களை எதிர்க்கவும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பச்சைத் தமிழகம் கட்சி தொடங்கப்பட்டதாக” அவர் கூறியுள்ளார்.

News January 3, 2025

குமரியின் புதிய எஸ்.பி பதவியேற்றார்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுந்தரவதனம் சென்னை க்யூ பிரிவு போலீசாக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஸ்டாலின் இன்று(ஜனவரி 3 ) குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். *ஷேர்*

News January 3, 2025

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க மாணவர்களுக்கு சிறு தேர்வு

image

குமரி மாவட்டத்தில் அனைத்து வகை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொதுத்தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக 10,11 ,12 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதம் 6ஆம் தேதி சிறு தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான கால அட்டவணையும் பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு காலை 9:30 – 10:30 மணி வரை நடைபெறும் என குமரி முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

நீர்நிலை பாதுகாவலர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

image

குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், குமரியில் நீர் நிலைகளைப் பாதுகாக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக அமைப்புகளுக்கு முதல் அமைச்சரின் ‘நீர்நிலைப் பாதுகாவலர்” விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ளோர் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கடைசி நாள் ஜனவரி 17.

News January 3, 2025

பிரதமரின் ஆலோசகர் அமித் காரே இன்று குமரி வருகை

image

பிரதமரின் ஆலோசகர் அமித் காரே மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று (ஜன.03) மாலை 5 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு கன்னியாகுமரி வருகை தர இருக்கின்றனர்.கன்னியாகுமரி வனத்துறை விடுதியில் தங்கியிருந்து சுற்றுலா மையங்களை பார்வையிட்டு பின்னர் 4ஆம் தேதி காலை 11 மணிக்கு கேரளா செல்கின்றனர். இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குமரியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News January 3, 2025

குமரியில் இன்று முதல் டோக்கன் விநியோகம்

image

ஜனவரி 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தமிழக அரசால் பொங்கல் பரிசாக பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முழு கரும்பு ஆகியன வழங்கப்பட உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 5.77 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதற்காக இன்று (ஜன.03) முதல் டோக்கன் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று தெரிவித்துள்ளார்.

News January 3, 2025

குமரி மாவட்ட தொகுதிகள் பாஜக மறு சீரமைப்பு

image

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் குமரி மாவட்டம் மறுசீரமைக்கப்பட்டு குமரி கிழக்கு, குமரி மேற்கு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் ஆகிய சட்டமன்ற தொகுதிகளும் மேற்கு மாவட்டத்தில் கிளியூர் பத்மநாபபுரம் விளவங்கோடு ஆகிய தொகுதிகளும் அடங்கியுள்ளன.

error: Content is protected !!