Kanyakumari

News January 6, 2025

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் அறிவிப்பு

image

குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று (ஜன. 6) வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்களுக்கு 15 நாட்களில் தீர்வு காணப்படும்; கந்துவட்டி போதை சம்பந்தப்பட்ட புகார்கள் மீது உடனடி தீர்வு காணப்படும்; மேலும் கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகள் கொண்டு வரும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

News January 6, 2025

குமரி சுற்றுச்சூழல் பூங்காவை 1 லட்சம் பேர் பார்வை

image

குமரியில் உள்ள அரசு பழத்தோட்டத்தில் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவை தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். பெரியவர்களுக்கு ரூ.50, சிறியவர்களுக்கு ரூ.25 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஒரே ஆண்டில் 1 லட்சத்து 115 பேர் இந்த பூங்காவை பார்வையிட்டுள்ளனர். இதில் 65,015 பெரியவர்கள், 35100 பேர் சிறியவர்கள் ஆவர்.

News January 6, 2025

குமரி மாவட்ட வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இன்று (06.01.2025) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இதன்படி, மாவட்டத்தில் ஆண் வாக்களர்கள் 788581 பேர், பெண் வாக்காளர்கள் 795637 பேர், மூன்றாம் பாலினத்தோர் 144 என மொத்தம் 1584362 வாக்காளர்கள் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. SHARE பண்ணுங்க

News January 6, 2025

குமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

image

வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும் வழக்கறிஞர்கள் பாதுகாப்புக்கு சட்டம் இயற்ற வலியுறுத்தியும் கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றங்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நாகர்கோவில், பத்மநாதபுரம், இரணியல், குழித்துறை, பூதப்பாண்டி, ஆகிய நீதிமன்றங்களில் 2500 வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

News January 6, 2025

தேங்காய்பட்டினம்: 43 படகுகளுக்கு போலி இன்சூரன்ஸ்!

image

கன்னியாகுமரி மாவட்டம் செங்கல்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் 43 நாட்டுப் படகுகளுக்கு போலீஸ் இன்சூரன்ஸ் தயாரித்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலியாக இன்சூரன்ஸ் தயார் செய்தவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் வகையில் காப்பீடு நிறுவனம் மூலம் குமரி மாவட்ட எஸ்பிக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 6, 2025

குமரியில் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர்

image

ஜனவரி 12-ம் தேதி விவேகானந்தரின் பிறந்த நாளை முன்னிட்டு, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் சுய சார்பு வாழ்க்கை குறித்தான டிஜிட்டல் கண்காட்சி நடைபெறுகிறது. இயற்கை சூழலை பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெறும் இக்கண்காட்சியை மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தொடங்கி வைக்கிறார். விவேகானந்தா கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். பலர் கலந்து கொள்கின்றனர்.

News January 6, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.5) காலை 10 மணிக்கு வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றக்கோரி நாகர்கோவில், பூதப்பாண்டி, இரணியல், பத்மநாபபுரம் மற்றும் குழித்துறை நீதிமன்றங்களில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு செய்யவுள்ளனர். #மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு தேமுதிக சார்பில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News January 6, 2025

வடசேரி பஸ் நிலையத்தில் கடைகளில் போலீஸ் சோதனை

image

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று கத்தியுடன் ஒருவர் பிடிபட்ட நிலையில் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினார்கள்அக்கா குட்கா,புகையிலைப் பொருட்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதா என்று அவர்கள் சோதனை நடத்தினார்கள் தடைச் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்க கூடாது என்று அவர்கள் அறிவுறுத்தினர்

News January 6, 2025

குமரி மாவட்டத்தில் 2 துணை ஆட்சியர்களுக்கு பதவி உயர்வு

image

கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாவட்ட உதவி கலால் ஆணையர் லோரேட் டா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் செல்லப்பாண்டியன் ஆகியோர் டிஆர்ஓ பதவி உயர்வு பெற்றுள்ளனர். இவர்கள் வெளி மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News January 5, 2025

குமரி எஸ்.பி நாளை பத்திரிக்கையாளர் சந்திப்பு

image

நாளை காலை சரியாக 10.00 மணிக்கு குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.ஸ்டாலின் பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார். இதில் மாவட்டத்திலுள்ள அனைத்து பத்திரிக்கை நண்பர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!