India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரணியல் அருகே இலந்தன் விளையைச் சேர்ந்தவர் தங்கம்மாள். இவரது மகன் பிரபு தாஸ். இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் அடிக்கடி தாயிடம் சண்டை போடுவது வழக்கம். இந்நிலையில், தாயை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லி அவர் மறுக்கவே, அவரை தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் இறந்துவிட்டார். இரணியல் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள், தங்களுடைய புகார்கள், கோரிக்கைகள் சம்பந்தமாக யாருடைய உதவியும், சிபாரிசும் இன்றி, நேரடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை தினமும் 12.00 மணி முதல் 02.00 மணி வரை சந்திக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா தலைமையில், குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர்.ஸ்டாலின் முன்னிலையில் சுற்றுச்சூழல் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு கூட்டம் இன்று (ஜன. 11) மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் அமைந்துள்ள நாஞ்சில் கூட்டரங்கில் வைத்து நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாயின் மணிக்கொடியை காக்க தன்னுயிர் நீத்த கொடிகாத்த குமரன் என்று அழைக்கப்படும் திருப்பூர் குமரன் நினைவு தினமான இன்று (ஜன. 11) அவர் தியாகத்தை போற்றுவோம்” என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினருமான விஜய் வசந்த் எம்.பி குறிப்பிட்டுள்ளார்.
குமரி மாவட்டத்தில் ரப்பர் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் ரப்பர் இங்கு பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 30,000 மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். ரப்பருக்கு விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனால் ரப்பர் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து ரப்பருக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்ய மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
குமரி மாவட்ட நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,“நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பால் பெருமை அடைகிறேன்; தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கான அரசியலை முன்னெடுக்கும் ஒரே தமிழ் தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் நம்பிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று துறை சார்ந்த அதிகாரிகளுடன் நாகர்கோவிலில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளை ஆய்வு செய்து அனுமதி இல்லாத பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
(ஜன11) கன்னியாகுமரி மாவட்ட இந்து தமிழர் கட்சியினுடைய மாவட்ட ஐடி பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் இன்று மாவட்ட தலைவர் ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் கட்சியினுடைய வளர்ச்சி பாதைக்கு மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்வேன் என்றும் கூறினார்.
குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் செல்ல பராமரிப்பு பணி காரணமாக வரும் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறை மட்டுமே செல்ல முடியும் என இன்று(ஜன.11) அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.*தடை செய்யப்பட்டதை நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,“போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போகி கொண்டாடுவோம்! சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் !இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.