Kanyakumari

News January 8, 2025

பொங்கல் பண்டிகை: குமரியில் இன்று முதல் 80 சிறப்பு பஸ்!

image

பொங்கல் பண்டிகையை கொண்டாட வெளியூர் மக்கள் சென்று வர வசதியாக குமரி மாவட்டத்தில் இருந்து இன்று(ஜன.8) முதல் வரும் 20ஆம் தேதி வரை சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. நாகர்கோவில், குமரி, மார்த்தாண்டம் பகுதிகளில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, கோவை போன்ற முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக நாகர்கோவில் மண்டல போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேற்று கூறினர்.

News January 8, 2025

குமரி: தாமதமின்றி வழக்குப் பதிவு செய்ய எஸ்பி உத்தரவு

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் நிலையங்களில் இருசக்கர வாகனம் திருட்டு, நகை பறிப்பு போன்ற பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது முறையாக வழக்குப்பதிவு செய்யப்படுவதில்லை என மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி, காலதாமதம் இன்றி உடனடியாக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

News January 8, 2025

துப்பாக்கிச் சுடும் பயிற்சி – குமரி மீனவர்களுக்கு எச்சரிக்கை!

image

குளச்சல் மீனவர் ஒருங்கிணைப்பு சங்க பொதுச்செயலாளர் ஆன்றோலெனின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினர் இன்று (8ஆம் தேதி) பருத்தித்துறை கடலில் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொள்ள உள்ளனர். ஆதலால் மீனவர்கள் அந்தப் பகுதியில் பிரவேசிக்க வேண்டாம் என்றும், அந்தப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.

News January 8, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(ஜன.8) காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான மருத்துவமனையில் மருத்துவர் நியமிக்க வலியுறுத்தி அரசு ரப்பர் கழக தோட்ட தொழிலாளர் சங்க கூட்டமைப்பு சார்பில் கீரிப்பாறையில் 38வது நாளாக தொடர் உண்ணாவிரதம் நடக்கிறது. #மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி ரவுண்டானா அருகில் தேமுதிக சார்பில் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News January 8, 2025

இஸ்ரோ புதிய தலைவராக குமரியை சேர்ந்தவர் நியமனம்!

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின்(ISRO) புதிய தலைவராக குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைவரான சோம்நாத்தின் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில், வி.நாராயணன் ஜனவரி 14 ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். இவர், திருவனந்தபுரம் வலியமலாவில் LPSC-யின் இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News January 8, 2025

குமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு

image

குமரி பகவதி அம்மன் கோயிலில் உள்ள 18 நிரந்தர உண்டியல்கள் நேற்று (ஜன.7) திறந்து எண்ணப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய உண்டியல் எண்ணிக்கை மாலை 6 மணி வரை நடந்தது. இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.43,8,510 ரொக்கம், 23 கிராம் தங்கம், 294 கிராம் 500 மில்லி கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. இது தவிர வெளிநாட்டு பணங்களும் வசூல் ஆகி இருந்தன.

News January 7, 2025

மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்திய குமரி எம்.பி

image

முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈ. வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று (ஜன. 7) சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்துகொண்டு அவர்களின் உருவ படங்களை திறந்து வைத்து புகழ் அஞ்சலி செலுத்தினர்.

News January 7, 2025

குமரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தில் ( ஜன.10 ) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் 10, +2,ஐடிஐ, டிப்ளமோ, மற்றும் கணினி பயிற்சி முடித்தவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு <>https://www.tnprivatejobs.tn.gov.in/<<>> கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்

News January 7, 2025

வணிகர்கள் மகாஜன சங்க மாவட்ட தலைவர் அறிக்கை

image

வணிகர்கள் மகாஜன சங்க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆர்.எஸ்.ராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (6.1.2025) முதல் இரவு 11 மணிக்கு கடைகள் அடைக்க பட வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட புதிய காவல் துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் கடைகள் அடைக்கப்பட்டு இருப்பதை குமரி மாவட்ட வணிகர்கள் மகாஜன சங்கம் மனதார வரவேற்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

News January 7, 2025

குமரி மாவட்டத்தில் HMPV வைரஸ் பாதிப்பு இல்லை

image

இந்தியாவில் HMPV வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் கேரள எல்லைப் பகுதியில் அமைந்திருப்பதால் இங்கும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரையிலும் HMPV வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லை என்று மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. *இருந்தாலும் SAFETY முக்கியம் மக்களே*

error: Content is protected !!