Kanyakumari

News January 13, 2025

மேல்மருவத்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகர்கோவில் மண்டலம் சார்பில் அருள்மிகு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி திருக்கோவிலுக்கு ஜன.15,16 தேதிகளில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 5 மணிக்கு சிறப்பு பேருந்து இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் ஜன.16,17 தேதிகளில் ஆதிபராசக்தி கோவிலிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

News January 13, 2025

வேலை வாங்கித் தருவதாக மோசடி – குமரி போலீஸ் எச்சரிக்கை

image

நாகர்கோவிலில் ஒரு பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இன்று(ஜன.13 )குமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

News January 13, 2025

தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

image

 68வது தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையிலான தடகள போட்டிகள் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்றது. இதில் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ரிந்தியா கலந்து கொண்ட தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. தொடர்ந்து இன்று(ஜன.13) ரிந்தியாவிற்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில், வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளி மேலாண் குழு உறுப்பினர்கள் அனைவரின் மூலம் பொன்னாடை அணிவித்து ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

News January 13, 2025

குமரியில் அ.தி.மு.க சார்பில் பொங்கல் கொண்டாட்டம்

image

கன்னியாகுமரி(கி) மாவட்ட அ.இ.அ.தி.மு.க சார்பில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட அலுவலகத்தில் இன்று(ஜன.13) பொங்கல் திருவிழா, அமைப்புச் செயலாளரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய்சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பச்சைமால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News January 13, 2025

பாஜக தேசிய பொதுச் செயலாளர் நாளை குமரி வருகை

image

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சாஹ் நாளை (14-ந்தேதி) கன்னியாகுமரி வருகிறார். பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி வரும் அவர் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலை 4 மணிக்கு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் 5.45 மணிக்கு நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்கிறார்.

News January 13, 2025

குமரியில் பொது இடத்தில் மது அருந்தியதாக 9 பேர் மீது வழக்கு

image

குமரி மாவட்டத்தில் நித்திரவிளை பகுதியில் சைஜு, ராஜேஷ் குளச்சல் பகுதியில் சிபு கோட்டார் பகுதியில் நவீன் ராஜ், நேசமணி நகர் பகுதியில் மணிகண்டன் மற்றும் முகேஷ், பூதப்பாண்டி பகுதியில் ஜீனோ மற்றும் வர்க்கீஸ், கன்னியாகுமரி பகுதியில் அந்தோணி ஆகியோர் பொது இடத்தில் மது அருந்தியதாக அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

News January 13, 2025

பாலபிரஜாபதி அடிகளாருன் நடிகை காயத்ரி ரகுராம் சந்திப்பு

image

நடிகை காயத்ரி ரகுராம் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று(ஜன.12) குமரி மாவட்டம் வந்தார். அவர் அய்யா வழிபாட்டின் தலைமையிடமாக திகழும் சாமி தோப்புக்கு சென்றார் அங்கு பூஜிதகுரு பால பிரஜாபதி அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார். இதில் சினிமா தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார், பேராசிரியர் தர்ம ரஜினி உள்பட பலர் பங்கேற்றனர்.

News January 13, 2025

திரைப்பட நடிகர் சரத்குமாருக்கு பாஜக உற்சாக வரவேற்பு

image

குமரியில் நடைபெறும் பொங்கல் விழா உட்பட பல்வேறு விழாக்களில் நேற்று(ஜன.12) இரவு கலந்து கொள்ள வந்த திரைப்பட நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார்க்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ், ஜவான் ஐயப்பன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

News January 13, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

காலை 9 மணி; கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வலியுறுத்தி ரப்பர் கழக தொழிற்சாலை முன்புதோட்ட தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் 42 வது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் நடக்கிறது.  காலை 11 மணி; கீரிப்பாறை காவல் நிலையம் முன்பு காவல்துறை தங்கத்துரை என்பவர் மீது பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் காவல் நிலைய முற்றுகை போராட்டம் நடக்கிறது.

News January 13, 2025

இஸ்ரோ தலைவரை சந்தித்த குமரி எம்.பி

image

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வி நாராயணனை நேற்று (ஜனவரி 12) குமரி எம்.பி விஜய் வசந்த் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன், திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!