India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்ட நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில்,“நாம் தமிழர் கட்சி மாநில கட்சியாக தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பால் பெருமை அடைகிறேன்; தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கான அரசியலை முன்னெடுக்கும் ஒரே தமிழ் தேசிய அரசியல் கட்சியான நாம் தமிழருக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்திருக்கும் நம்பிக்கை” என குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா இன்று துறை சார்ந்த அதிகாரிகளுடன் நாகர்கோவிலில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் அவர் பேசும் போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செயல் அலுவலர்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பன்றி பண்ணைகளை ஆய்வு செய்து அனுமதி இல்லாத பண்ணைகளை உடனடியாக மூட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
(ஜன11) கன்னியாகுமரி மாவட்ட இந்து தமிழர் கட்சியினுடைய மாவட்ட ஐடி பிரிவு பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் இன்று மாவட்ட தலைவர் ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் கட்சியினுடைய வளர்ச்சி பாதைக்கு மிகுந்த ஆர்வத்துடன் பணி செய்வேன் என்றும் கூறினார்.
குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி பாலத்தில் செல்ல பராமரிப்பு பணி காரணமாக வரும் 3 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு பாறை மட்டுமே செல்ல முடியும் என இன்று(ஜன.11) அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. பாலம் திறக்கப்பட்டு 10 நாட்களே ஆன நிலையில் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருப்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.*தடை செய்யப்பட்டதை நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்*
குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில்,“போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களை எரிப்பதை தவிர்த்து காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். போகி கொண்டாடுவோம்! சுற்றுச் சூழலை பேணிக் காப்போம் !இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
“முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நினைவு தினத்தில் நமது தேசத்திற்காக அவர் ஆற்றிய சேவைகளை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்” என கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் எம்.பி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இந்தியா தன்னிறைவு அடைவதற்கு திட்டங்கள் வகுத்து வழிநடத்திய தலைவருக்கு அஞ்சலி என கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு 2,600 டன் ரேஷன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அரிசி சரக்கு ரெயில் வேகன்கள் மூலமாக கொண்டு வரப்பட்டன. மொத்தம் 42 வேகன்களில் வந்த அரிசி மூடைகள் நேற்று நாகர்கோவில் கோட்டார் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் அந்த வேகன்களில் இருந்து லாரிகளில் மூடைகள் ஏற்றப்பட்டு உணவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 520 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 135 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 690 பெருஞ்சாணி அணையில் இருந்து 360 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 339 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 125 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டத்தின்கீழ் 35 % அல்லது ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. புதிரை வண்ணார் சமூகத்தினர் குமரி தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலத்தை அணுகி உரிய ஆவணங்கள் சமர்பித்து தொழில் கடன் பெற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இம் மாதம் 13, 14, 15, 16 தேதிகளில் கடலுக்குள் மீன்பிடிக்க போவதை தவிர்ப்பது நல்லது ,
கடல் பகுதியில் சூறைக்காற்று கிழக்கில் இருந்து தெற்கு ,தென்மேற்கு திசையை நோக்கி மணிக்கு 35 முதல் 45 km வேகத்தில் வீசும் வாய்ப்பு உள்ளது எனவே மீனவர்கள் எச்சரிக்கை உணர்வுடன் இருப்பது நல்லது என்று கன்னியாகுமரி மாவட்ட தனியார் வானிலை ஆய்வு மைய தெரிவித்து
Sorry, no posts matched your criteria.