India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மயிலாடி, சிபின்(25) என்பவரது மனைவி சில நாட்களுக்கு முன்பு சிபினிடம் சண்டையிட்டு, பெற்றோர் வீட்டிற்குச் சென்றுள்ளார். நேற்று(ஆக.21) மனைவியை அழைத்து வர சிபின் சென்றபோது ஏற்பட்ட தகராறில், சிபினின் மாமனார் ஞானசேகரன் மாடியில் இருந்து ஹாலோ பிளாக் கல்லை தூக்கி சிபின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயமடைந்த சிபின் உயிரிழந்தார். இதையடுத்து அஞ்சுகிராமம் போலீசார் ஞானசேகரனை கைது செய்தனர்.

குமரி மக்களே, உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படிப்பு பயில விரும்பும் மாணவ – மாணவிகளுக்கு கல்விக்கடன் பெற ரூ.100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று தெரிவித்தார். இதில் இதுவரை ரூ.28 லட்சம் கடனாக வழங்கப்பட்டுள்ளது என்றும், மாணவ-மாணவியர்கள் உயர்கல்விக்கு கல்விக்கடன் பெறுவதற்கு விண்ணப்பித்து கடன் பெறலாம் என்றும் அவர் கூறினார்.

குமரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரையிலும் 120 முகாம்கள் நடத்தப்பட்டு 62,638 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. சொத்து வரி, பிறப்பு சான்றிதழ், பெயர் மாற்றம், மின் கட்டண பெயர் மாற்றம், புதிய மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட 4724 மனுக்களுக்கு தீர்வுகள் காணப்பட்டு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

உழவரைத்தேடி வேளாண்மை முகாம் இன்று(ஆக.22) சுசீந்திரம், பறக்கை, நாவல்காடு, நுள்ளிவிளை, வெள்ளிமலை, கண்ணனூர், பளுகல், இனயம்புத்தன்துறை, அதங்கோடு, அகஸ்தீஸ்வரம், தர்மபுரம் தெற்கு, தோவாளை, குமாரபுரம், நெய்யூர், குலசேகரம், அண்டுகோடு, கிள்ளியூர், குளப்புரம் ஆகிய 18 கிராமங்களில் நடக்கவுள்ளது. இம்முகாமில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு குறைகள் & கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெற ஆட்சியர் அறிவிப்பு.

குமரி மாவட்டத்தில் உள்ள பிரபல ஹெல்த்கேர் நிறுவனத்தில் (Duty Manager)க்கு பணியிடங்கள் காலியாக உள்ளதாக தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஊதியமாக 15,000 – 25,000 வரை வழங்கபடுகிறது. 10th படித்திருந்தால் போதும் இந்த பணிக்கு விண்ணபிக்கலாம். இங்கே<

கன்னியாகுமரி மக்களே நீங்கள் வாடகை வீடுகளில் குடியீருக்கீங்களா..? 3 மாதத்துக்கு முன்னாடியே வீட்டு ஓனர் வீட்டு வாடகையை உயர்த்துவது (அ) முன்னறிவிப்பின்றி உங்களை தீடீரென்று வீட்டை காலி செய்ய சொன்னால் என்ன செய்வது என்று யோசீக்கிறீர்களா..? இனி இதை பண்ணுங்க… உங்களுக்காகவே (TNRRLA, 2017) என்ற சட்டத்தின் கீழ் கன்னியாகுமரி வாடகை தீர்வாளர் அதிகாரியிடம் 9445000482, 9445000483 புகாரளியுங்க.SHARE பண்ணுங்க..

தமிழ்நாடு காவல்துறையில் 2833 காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு நாளை(ஆக.22) முதல் செப்.21ம் தேதி வரை <

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (ஆகஸ்ட. 21) நீர்மட்ட விவரம்: பேச்சிப்பாறை அணை – 41.64 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 65.10 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 8.56 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை – 8.66 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும், பேச்சிப்பாறைக்கு 623 கன அடி, பெருஞ்சாணிக்கு 217 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

குமரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாகர்கோவிலில் ஒவ்வொரு மாதமும் 3வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இம்மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது நாளை (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் குமரியைச் சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்று வேலைவாய்ப்பை பெற SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.