Kanyakumari

News February 1, 2025

குமரி – பனாரஸ் இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு

image

ரயில் எண் 06163 குமரி – பனாரஸ் சிறப்பு ரயில், 2025-ஆம் ஆண்டு (பிப்.17) தேதி கன்னியாகுமரியில் இரவு 11:30 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் காலை 7:15 மணிக்கு பனாரஸ் சென்றடையும். மறு மார்க்கத்தில் ரயில் எண் 06164 பனாரஸ் – கன்னியாகுமரி சிறப்பு ரயில், 2025-ஆம் ஆண்டு (பிப்.23 ) பனாரஸில் மாலை 7:05 மணிக்கு புறப்பட்டு, நான்காம் நாள் அதிகாலை 2:45 மணி கன்னியாகுமரி வந்தடையும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

News February 1, 2025

கோட்டாறு வக்பு உரிமை மீட்பு மாநாடு நடக்கிறது

image

SDPI கட்சி கன்னியாகுமரி மாவட்டம் சார்பாக வஃக்பு உரிமை மீட்பு மாநாடு இம்மாதம் 23ஆம் தேதி (2025) அன்று கோட்டாரில் நடைபெற உள்ளது. இதனை ஒட்டி மாநாடு தொடர்பான லோகோ இன்று வெளியிடப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி தலைவர் சுல்பிகர் அலி மற்றும் நிர்வாகிகள் லோகோவை வெளியிட்டனர். இந்த நிகழ்ச்சியில் எச்டிபிஐ கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

News February 1, 2025

ரயில்களில் போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க ஐ.ஜி. உத்தரவு

image

ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி. ஈஸ்வரராவ் இன்று நாகர்கோவில் வந்தார். நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகத்தில் அவர் ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் ரயில்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

News February 1, 2025

வண்டல் மண் எடுக்க விண்ணப்பம் -ஆட்சியர் 

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “மாவட்டத்தில் ஏரி, குளம், குட்டைகளில் இருந்து பொதுமக்கள்ஷ, மண்பாண்டம் செய்பவர்கள், விவசாயிகள் விவசாய தேவைகளுக்காக இலவசமாக வண்டல் மண், களிமண் கிராவல் மண் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்; இதற்கு இணையதளத்தில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற்றுக் கொள்ளலாம்” என கூறியுள்ளார்.

News February 1, 2025

குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர் மீது நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு கனரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஓட்டுநர்கள் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த 12 பேர் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக எஸ்பி ஸ்டாலின் இன்று தெரிவித்தார்.

News February 1, 2025

குமரியில் 8 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது இதனை தொடர்ந்து மாவட்டத்தில் விவசாயிகள் தங்கள் நெல்லை விற்பனை செய்வதற்கு சிறமடம், கடுக்கரை, திட்டுவிளை, தாழக்குடி, செண்பகராமன் புதூர் ,பறக்கை ,புத்தளம், கிருஷ்ணன் கோவில் ஆகிய இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது

News February 1, 2025

டீக்கடைக்காரர் வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ஒருவர் 11 மணிக்கு மேல் கடையை அடைக்க காவல்துறை வற்புறுத்துவதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் இரவு 11 மணிக்குள் கடையை மூட போலீசார் கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல, அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என நேற்று தீர்ப்பு வழங்கியது.

News February 1, 2025

குமரி மாவட்டத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று (பெ. 1)காலை 8:00 மணியுடன் முடிவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் வெப்ப சலனத்தால் காரணமாக பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் :
அடையாமடை 5,
குமாரபுரம் 5,
நெய்யூர் 3, அப்பர் கோதையார் 2,
கல்லாறு எஸ்டேட் 1,
சிவலோகம் 0.5, என்று பதிவாகியுள்ளது.
இன்றும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் பிற்பகலுக்கு பிறகு மாலை நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

News February 1, 2025

குமரி அணைகளுக்கான இன்றைய நீர் வரத்து விபரம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை 475 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 174 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 787 பெருஞ்சாணி அணையில் இருந்து 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 443 கன அடியும் பெருஞ்சாணி அணைக்கு 104 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

News February 1, 2025

மும்பை – நாகர்கோவில் இடையே வாரம் இரு முறை சிறப்பு ரயில்

image

மும்பை நாகர்கோவில் இடையே வாரம் இரு முறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மார்ச் மாதம் 10 ,12 , 17 ஆகிய தேதிகளில் மும்பையில் இருந்து நாகர்கோவிலுக்கும், மார்ச் 11, 13,18 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கும் இயக்கப்படுகிறது. ரேணிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி, நெல்லை வழியாக இந்த ரயில் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!