India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற அருள்மிகு நாகராஜா கோயிலில் தை திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. இதையொட்டி நாளை(பிப்.11) திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. திருத்தேரில் பாமா ருக்மணி சமேத ஆனந்த கிருஷ்ணன் வலம் வர உள்ளார். நாளை விடுமுறை என்பதால் திரளான பக்தர்கள் கலந்து கொள்வர்.
#இன்று(பிப்.10) காலை 7 மணிக்கு பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில் தை தேரோட்டம் நடக்கிறது.#காலை 9 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் கழக தொழிற்சாலை முன்பு ESI காப்பீடு திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தி 66வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.#காலை 10 மணி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கம் சார்பில் 24 மணி நேர தர்ணா போராட்டம் நடக்கிறது
விவசாயிகளுக்கு நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விபர எண் வழங்கும் திட்டம் அரசினால் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆதார் எண் போன்ற ஒவ்வொரு தனித்துவமான “அடையாள எண்” வழங்கப்படும். இனிவரும் காலங்களில் அரசு மானியங்கள் இந்தஎண் மூலம் வழங்கப்படும் என்று குமரி ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் மது அருந்திக் கொண்டிருந்த 47 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில் வலம்புரி விளை உரக் கிடங்கில் தீ இரண்டு நாட்களில் அணைக்கப்பட்டு விடும் என்று மாநகராட்சி மேயர் மகேஷ் கூறியுள்ளார். தீ அணைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தனியார் வசம் தண்ணீர் டேங்க் இருந்தால் அவற்றை வலம்புரி விளை குப்பை கிடங்கிற்கு கொண்டு வர ஏற்பாடு செய்துள்ளோம். மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்து தனியார் தண்ணீர் டேங்க் கொண்டுவரப்பட்டு தீயணைக்கப்பட்டு வருகிறது என்றார்.
கொல்லங்கோடு அருகே வள்ளவிளை மீனவ கிராமத்தில் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமில் ஐ.ஆர்.இ.எல். நிறுவன அதிகாரிகள் பங்கேற்க சென்றனர். அப்போது மணல் எடுக்க அதிகாரிகள் சென்றதாக வெளியான தவறான தகவலால் மக்கள் அதிகாரிகள் வாகனதை சிறை பிடித்தனர். தொடர்ந்து முகாமில் இருந்து அதிகாரிகள் தப்பி சென்றனர். அதிகாரிகள் வாகனத்தை கொல்லங்கோடு போலீசார் மீட்டு சென்றனர்.
குமரியில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மார்த்தாண்டத்தில் இருந்து காலை 7 மணிக்கு புறப்பட்டு 12 சிவாலயங்களுக்கும் செல்கிறது. 103 கிலோமீட்டர் தூரம் பேருந்து செல்கிறது.இதற்கு 300 ரூபாய் பயண கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.50 பக்தர்கள் இணைந்து செல்ல தனி பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்து வணிக மேலாளர் ஜெரோலின் ஜெப சிங் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் உள்ள பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோயில் தைமாத திருவிழாவை ஒட்டி தோவாளை வட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்லூரி நிறுவனங்களுக்கு நாளை (10.02.25) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளுக்கு விடுமுறை இல்லை . உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக பிப்.22-ம் தேதி சனிக்கிழமை வேலை நாள் என மாவட்ட ஆட்சியர் அழகு மீனா அறிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மாணவ மாணவியர்களை, நாகர்கோவிலில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரவழைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா இ.ஆ.ப., இன்று(பிப்.8) பாராட்டி பரிசுகள் வழங்கினார்.
ஈரோடு இடைத்தேர்தலில் நாம் தமிழர் பெற்றிருக்கும் 23,810 வாக்குகள் என்பது அதிகார பலத்தையும், பண வலிமையையும் எதிர்த்து செய்த போரில் கிடைத்த வெற்றி. நம் மீதான இருட்டடிப்புகளையும், பொய் அவதூறு பிரச்சாரங்களையும் மீறி நம் மக்கள் நமக்கு கொடுத்த அங்கீகாரம். நமக்கு கிடைத்திருக்கும் ஒவ்வொரு வாக்கும், மாற்றத்திற்கான மக்களின் தேடல். என்று குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி மரிய ஜெனிபர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.