India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் நாகர்கோவில் பறக்கை அரசு உயர்நிலை பள்ளியின் 7-ம் வகுப்பு மாணவன் S.முகமது அப்துல்லா சிலம்பு ஆட்டத்தில் இரட்டை கம்பு சுற்று போட்டியில் தொடர்ந்து 2 மணி 45 நிமிடம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்துள்ளார். இதை அடுத்து இன்று (பிப். 12) மேயர் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ரெ.மகேஷ் மாநகராட்சி அலுவலகத்தில் சந்தித்து வெற்றி பெற்ற சான்றிதழினை காண்பித்து வாழ்த்து பெற்றார்.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோணத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வரும் (பிப்ரவரி 14) வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 10, +2, ஐ.டி.ஐ டிப்ளமோ படித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும் பங்கேற்க விரும்புவோர் <
மாத்தூர் தொட்டி பாலத்தின் முன் பகுதியில் இருந்த காமராஜரின் கல்வெட்டு நேற்று உடைந்த நிலையில் கிடந்தது. இதனை யாரோ விஷமிகள் உடைத்து விட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அதிவேகமாக கல்வெட்டுடன் மோதியதில் கல்வெட்டு உடைந்தது தெரியவந்துள்ளது/ அந்த நபரை பிடிக்க திருவட்டாறு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நெல் கொள்முதல் செய்வதற்காக நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த கொள்முதல் நிலையங்களில் இருந்து தூசிகள் அருகில் உள்ள வீடுகளுக்கு செல்லாத வகையில் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அழகுமீனா அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதி கடையால் பேரூராட்சிக்குட்பட்ட திற்பரப்பு அருவியில் வைத்து நேற்று (பிப். 11) இயக்குனர் செல்வகுமாரன் தலைமையில் நெஞ்சில் மாமழை என்ற திரைப்படம் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக விலவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை எம்.எல்.ஏ. கலந்து கொண்டு படப்பிடிப்பினை துவக்கி வைத்தார்.
காலை 11 மணி -தேமுதிக இருபத்தைந்தாவது ஆண்டு கொடி நாளை முன்னிட்டு இரண்டு இடங்களில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. மாலை 5.30 மணி – நாகராஜா கோவில் 10ம் நாள் திருவிழாவையொட்டி ஆராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. பகல் 1 மணி – அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களுக்கு பணி மேம்பாட்டிற்கான ஊதியம் வழங்க கோரி ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி உட்பட 8 கல்லூரிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடக்கிறது
நாகர்கோவில் ராமன்புதூர் லிட்டில் பிளவர் தெருவில் பாலியல் தொழில் நடைபெறுவதாக மணிகண்டன்(25) என்பவர் புகாரளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பாலியல் தொழிலில் ஈடுபட்ட புரோக்கர் கிறிஸ்டி பிரபா(42), நண்பர் கார்த்திகேயன் மற்றும் மற்றொரு பெண்ணை கைது செய்தனர். மரைன் பயிற்சி நிறுவனத்திற்கு என வாடகைக்கு கட்டடம் எடுக்கப்பட்டு அதில் பாலியல் தொழில் நடைபெற்றுள்ளது என விசாரனையில் தெரியவந்துள்ளது
#இன்று(பிப்.11) காலை 7:30 மணிக்கு நாகர்கோவில் அருள்மிகு நாகராஜா கோவில் தைப் பெருந்திருவிழா தேரோட்டம் நடக்கிறது.#காலை 10 மணிக்கு மார்த்தாண்டம் காவிரி சந்தை உரக் கிடங்கு பகுதியில் காய்கறி வியாபாரம் செய்யும் வியாபாரிகள் இடம் ரசீது இல்லாமல் குத்தகை பணம் வசூலிப்பதை கண்டித்து காய்கறி வியாபாரிகள் சார்பில் காய்கறி சந்தை முன்பு சாலை மறியல் போராட்டம் நடக்கிறது.
குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரி ராஜேஷ் முன்னிலையில் ஊழியர்கள் மார்த்தாண்டம் வடக்கு தெரு, பல்வேறு பகுதிகளில் பல கடைகளில் இன்று சோதனை செய்தனர் .பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது, பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. ஐந்து கடைகளுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.20000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோவிலில் நாளை(11-ம் தேதி) தைப்பூசத் திருநாளை முன்னிட்டு காலை 7 மணிக்கு ஸ்ரீ சந்திரசேகர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், ஸ்ரீ கௌரி அம்பாள் வெள்ளி அன்னம் வாகனத்திலும் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது. தாணுமாலய சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்திலும், அறம் வளர்த்த நாயகிஅம்பாள் வெள்ளி அன்னம் வாகனத்திலும் திருவீதி உலா நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.