India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மேல்புறத்தில் இருந்தும், பம்பத்தில் இருந்தும் இன்று மதியம் துவங்கும் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் குழித்துறை வழியாக தாமிரபரணி ஆற்றை வந்தடையும். இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . எனவே இன்று மதியம் 1 முதல் மாலை 6 வரை பொதுமக்கள் மார்த்தாண்டம், குழித்துறை நகருக்குள் உள்ள பிரதான சாலையை பயன்படுத்தாமல் மாற்றுப்பாதையை பயன்படுத்தி ஒத்துழைக்குமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

பட்டியல் இனத்திலிருந்து கிறிஸ்துவராக மதம் மாறியதை மறைத்து தேர்தலில் போட்டியிட்ட அமுதாராணி தேரூர் பேரூராட்சி தலைவராக தேர்வானார். இது தொடர்பாக மதுரை ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டு அவரை தகுதி நீக்கம் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து அமுதாராணி தரப்பு அப்பீல் செய்தது. நேற்று மதுரை ஐகோர்ட் நீதிபதிகள் ஏற்கனவே தனி தீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்தனர்.

▶️தேன் குழல்
▶️ஓலம்
▶️ஏரிசேரி
▶️கலத்தப்பம்
▶️நெய்ப்பம்
▶️அச்சப்பம்
▶️மடக்குசான்
▶️குழல்அப்பம்
▶️சுக்கப்பம்
▶️பூரியான்
▶️கிண்ணத்தப்பம்
▶️சக்கோலி

குமரி மக்களே நீங்கள் வாங்கிய நிலங்கள் (அ) உங்க தாத்தா, அப்பா வாங்கிய நிலங்களின் பழைய பத்திரம் இருக்கு, ஆனா நிலம் எங்க இருக்கன்னு தெரியலையா? சர்வேயர்க்கு காசு கொடுக்கனுமான்னு யோசீக்கிறீங்களா? உங்க நிலங்களை கண்டுபிடிக்க EASYயான வழி. <

ஆட்சியர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கண்புரை நோயாளர்களுக்கு இலவச கண் லென்ஸ் பொருத்தும் முகாம் செப்.3-ந்தேதி முட்டம் P.H.C. யிலும், செப்.8. ம்தேதி கோதநல்லூர் P.H.C.யிலும், 9ந்தேதி இடைக்கோடு P.H.C.-யிலும், செப்.16-ந்தேதி குளச்சல் G.H.லும் செப்.17.ந்தேதி ஆறுதேசம் P.H.C.யிலும், 26ந்தேதி குலசேகரம் G.H.லும் நடைபெறுகிறது.

தேசிய நீர்மின்சாரக் கழகத்தில் (NHPC) உதவி ராஜ்யசபா அதிகாரி, ஜூனியர் இன்ஜினியர், கணக்காளர், மேற்பார்வையாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர் உள்ளிட்ட 248 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிப்ளமோ, B.E, CA கல்வித்தகுதியாக கொண்ட இப்பணிக்கு சம்பளமாக ரூ.27000 முதல் ரூ.1,40,000 வழங்கப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் <

குமரி பெற்றோர்களே, உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு 18 வயதா? உடனே VOTER IDக்கு அப்ளை பண்ணுங்க. இந்த லிங்கை கிளிக் செய்து அதில் Form 6ஐ கிளிக் செய்து பூர்த்தி செய்ய வேண்டும். பெயர் சேர்த்தல் நீக்கம், மாற்றம் செய்ய Form 7 (அ) 8ஐ கிளிக் செய்ய வேண்டும். வெளிநாட்டு வாழ் மக்களும் Form 6Aவை <

ஆக.30 குமரி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு தேவைப்படும் பாக்டம் பாஸ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொச்சியில் இருந்து குமரி மாவட்டத்திற்கு தேவையான பாக்டம் பாஸ் உரம் வராத காரணத்தால் கடந்த ஒரு வார காலமாக தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பாக்டம்பாஸ் உரம் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். இந்த உரம் விவசாய பயிர்களுக்கு அடி உரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குமரியின் மேற்கு கடற்கரை பகுதியில் குளச்சல் துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்திலிருந்து ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றன. படகுகளை நிறுத்த போதிய வசதி இல்லாததால் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 350 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கத் திட்டம் தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் நிதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குமரி ரயில் நிலையத்தில் ரயில்கள் எங்க போகுது? உங்க ரயில் எந்த பிளாட்பார்ம் ல நிக்கதுன்னு தெரியலையா?? உங்களுக்காகவே ஒரு SUPER தகவல்.. NTES மூலமாக குமரியில் இருந்து எத்தனை ரயில்கள் கிளம்புகிறது. எந்தெந்த பிளாட்பார்ம் ல ரயில் நிக்குதுன்னு இங்க <
Sorry, no posts matched your criteria.