Kanyakumari

News February 14, 2025

குமரி கடற்கரையில் குவிந்த காதல் ஜோடிகள்

image

உலகம் முழுவதும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதை தொடர்ந்து இன்று குமரி கடற்கரையில் ஏராளமான காதல் ஜோடிகள் குவிந்தனர். அவர்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் ஒருவருக்கொருவர் பரிசு பொருட்களை கொடுத்து மகிழ்ந்தனர். இதில் அத்துமீறிய ஜோடிகளை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

News February 14, 2025

குமரியில் 22,044 பேர்  10ஆம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்!

image

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் 22 ஆயிரத்து 44 மாணவ மாணவிகள் இந்த தேர்வினை எழுதுகின்றனர். இதில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 283 பேரும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 761 பேரும் இந்த தேர்வினை எழுதுதவுள்ளனர்.

News February 14, 2025

குமரியில் 22,461 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்!

image

பிளஸ் 2 தேர்வு வரும் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் பகல் 1.15 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் 22 ஆயிரத்து 461 பேர் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். இதில் மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 11,565, பேரும் நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 10,896 பேரும் தேர்வு எழுதவுள்ளனர்.

News February 14, 2025

நாகர்கோவில் புத்தக கண்காட்சியில் ஒரு லட்சம் புத்தகங்கள்!

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று கூறியதாவது, நாகர்கோவில் 6வது புத்தக கண்காட்சி வரும் 19ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 3ஆம் தொகுதி வரை நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. 1 லட்சம் புத்தகங்கள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றுள்ளார்.

News February 14, 2025

விவசாயிகளுக்கு இலவச மரக்கன்றுகள் விநியோகம்!

image

வேளாண் கார்கள் திட்டத்தின் கீழ் நிழல் தரக்கூடிய மரங்கள் மற்றும் தடி மர வகை நாட்கள் இலவசமாக நாகர்கோவில் சமூக காடுகள் சரகம் மூலம் கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் விவசாய பெருமக்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகாகனி, தேக்கு, ஈட்டி, செம்மரம், சவுக்கு போன்ற கன்றுகள் வழங்கப்படும் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 14, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.14) காலை 11 மணிக்கு கன்னியாகுமரி வணிக நிறுவனங்களில் ஆங்கிலம் மற்றும் தமிழில் பெயர் பலகை வைக்க வலியுறுத்தி கன்னியாகுமரி ரவுண்டானா தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.#மாலை 5.30 மணிக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி ஆட்சியாளர் அலுவலகம் மற்றும் கல்குளம் விளவங்கோடு ஆகிய இடங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

News February 14, 2025

கன்னியாகுமரி: தேர்வு இல்லாமல் அஞ்சல் துறையில் வேலை!

image

அஞ்சல் துறையில் <>வேலைவாய்ப்பு அறிவிப்பு<<>> வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் 45 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News February 14, 2025

“DRUG FREE TN” டவுன்லோட் செய்யுங்கள் குமரி மக்களே!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களுடைய சுயவிவரங்கள் இன்றி புகார் செய்வதற்கு “DRUG FREE TN” என்ற அலைபேசி செயலியை (Mobile App) பதிவிறக்கம் செய்யுங்கள்.
என்று குமரி மாவட்ட ஆட்சியர் ஆர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.

News February 14, 2025

சிறப்பு வேலை வாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

image

குமரி மாவட்ட நிர்வாகம் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம், நான் முதல்வன் மற்றும் மாவட்ட திறன் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் பிப்ரவரி 14 மற்றும் 15 அன்று சுங்கான்கடை புனித சேவியர் பவறியியல் கல்லூரியில் நடைபெறுகிறது. காலை 9.30 மணிக்கு தொடங்கி முகாம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 13, 2025

குமரியில் சுட்டெரிக்கும் வெயில்!

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்தது வருகிறது.
இதனால் வாகன ஒட்டிகளும் பாதசாரிகளும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒட்டுமொத்த கன்னியாகுமரி மாவட்ட அளவில் சமவெளியில் மாவட்டத்திலே மிகவும் அதிகபட்ச வெப்பநிலையாக இன்று (பிப். 13) பேச்சிப்பாறையில் 37°C, 99F என்ற அளவில் வெயில் சுட்டெரித்தது.

error: Content is protected !!