India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பில் ரப்பர் பயிரிடப்பட்டுள்ளது. இங்குள்ள ரப்பர் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த 10ம்தேதி ரப்பர் விலை (100 கி) 18,700 ரூபாயாக இருந்தது. 11ஆம் தேதி அது 19,000 ரூபாயாக உயர்ந்தது. இன்று வரை ரப்பர் விலையில் மாற்றம் இல்லாமல் 19 ஆயிரம் ரூபாயாக தொடர்ந்து நீடித்து வருகிறது. இது ரப்பர் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று (பிப். 13) மட்டும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டி வந்த நான்கு பேர், அதிவேகமாக அபாயகரமாக வாகனம் ஓட்டி வந்த 40 பேர், கனரக வாகனங்கள் சாலைகளில் பயணிக்கும்போது 16 டயர்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவு மீறி ஓட்டி சென்ற 45 பேர் உட்பட 89 வாகன ஓட்டுநர்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்க்கொள்ளப்பட்டது என மாவட்ட எஸ். பி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குமரி மாவட்டத்தில் இந்த மாதத்தில் 3 POCSO வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உறுதுணையாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், நீதிமன்ற காவலர்கள் இவ்வழக்கின் விசாரணையை கண்காணித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர காரணமாக இருந்த காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பள்ளியாடி ரத்னா சிட்டி ஃபண்ட் அதிபர் காலம் சென்ற கனகராஜ். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயரில் எழுதி கொடுத்த இடம் குழித்துறையில் உள்ளது. கிட்டத்தட்ட 18-ஆண்டுகளுக்கு பின் சோனியா காந்தியின் பெயரில் இருக்கும் இடத்தில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் காமராஜ் பவன் என்ற பெயரில் எதிர் வரும் 16-ம் தேதி திறப்பு விழா நடைபெற உள்ளது.
கடந்த 2002ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனை விடுதலை செய்து கன்னியாகுமரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
1996-2001 ஆண்டுகளில் சுற்றுலா அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் வருமானத்திற்கு அதிகமாக ₹17 லட்சம் சொத்து சேர்த்ததாக 2002ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து ஜனவரி 2025 மாத விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு பதில் அளிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை இம்மாதம் 16ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் வருகிறார். அன்று காலை 9 மணிக்கு திருநெல்வேலியிருந்து புறப்படும் அவர், 11:30 மணிக்கு குழித்துறையில் உள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் எம்பி, எம்எல்ஏக்கள் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இணையம்புத்தம்துறை பகுதியைச் சேர்ந்தவர் சுதன்(32). இவர் 14 வயது மாணவி ஒருவரை பெங்களூர் அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக புதுக்கடை போலீசார் சுதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். வழக்கை விசாரணை செய்த நீதிபதி சுந்தரையா இன்று சுதனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 லட்சத்து 98 ஆயிரம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் திட்டத்தின் கீழ் கிராம அலுவலகங்கள் ஊராட்சி அலுவலகங்களில் பதிவுகள் தொடங்கியுள்ளன. விவசாயிகளின் நில விபரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாய பதிவு விபர எண் வழங்க தமிழக அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்கப்படுகிறது.
குமரி கடலில் விவேகானந்தர் நினைவு மண்டபம் – திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பார்ப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த 45 நாட்களில் 3 லட்சம் பேர் கண்ணாடி கூண்டு பாலத்தை நேரில் பார்வையிட்டு அதில் நடந்து சென்றுள்ளனர். இது தங்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.