Kanyakumari

News February 16, 2025

பெண் உடைமாற்றுவதைப் பார்க்க முயன்ற வட மாநில தொழிலாளி கைது

image

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்தாப் (20) இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வருகிறார். வெட்டூர்ணிமடம் பகுதியில்வாடகை வீட்டில் தங்கி உள்ளார். இவரது வீட்டின் பக்கத்தில் பெண் ஒருவர் உடை மாற்றுவதைப் பார்க்க முயற்சித்துள்ளார். இது குறித்து அந்த பெண்அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் அபிதாப்பை நேற்று (பிப்-16) கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

News February 16, 2025

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

குழித்துறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் அலுவலகத்தை இன்று காலை 11:00 மணிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை திறந்து வைக்கிறார். காலை 10 மணி மணிக்கு ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் சார்பில் நல்லொழுக்க பயிற்சி முகாம்நடக்கிறது. மாலை 5 மணிக்கு விசிக சார்பில் வடசேரி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

News February 16, 2025

லாரி மீது டூவிலர் மோதியதில் ஒருவர் பலி

image

ஆத்தூர் அருகே செண்பகத் தோப்பு விளையைச் சேர்ந்தவர் ஜோயி டேவிஸ் (27).  இவர் இருசக்கர வாகனத்தில் பயணம் பகுதியில் சென்ற போது சாலை ஓரத்தில் நின்ற டாரஸ் லாரியின் பின்பக்கத்தில் மோதி படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில் மார்த்தாண்டம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 16, 2025

பொது இடத்தில் மது அருந்தியதாக 12 பேர் மீது வழக்கு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று பொது இடத்தில் மது அருந்தியதாக சிவசங்கரன், ரமேஷ், டென்னிஸ், மரிய சிலுவை, வள்ளிநாயகம், முருகேசன், நீலகண்டன், நெல்சன், பால்ராஜ், லிபின் உட்பட 12 பேர் மீது போலீசார் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தொடர்ந்து பொது இடத்தில் மது அருந்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

News February 15, 2025

தமிழக அமைச்சர்கள் குமரி வருகை!

image

குமரி மாவட்டம் கொட்டாரம் பெருமாள்புரம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட 100 குடியிருப்பு வீடுகள் திறப்பு விழா மற்றும் புதிதாக கட்டப்படவுள்ள 90 குடியிருப்பு வீடுகளுக்கான அடிக்கல் நாட்டுவிழா (பிப். 17) காலை 09.00 மணிக்கு நடைபெறவுள்ளது. குமரி பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அயலகதமிழர் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

News February 15, 2025

ஆழ்துளை கிணறுகளை நிரப்ப ஆட்சியர் உத்தரவு

image

குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில், “கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் களிமண் மணல் பாறைகள் குளங்கள் போன்றவற்றால் கீழே இருந்து தரைமட்டம் வரை நிரப்ப வேண்டும்; ஆழ்துளை கிணற்றை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்; ஆழ்துளை கிணறு அமைக்கும் போது கிணற்றில் அறிவிப்பு பலகை அமைக்க வேண்டும்; விபத்துகளை தடுக்க இதுபோன்ற 10 நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

News February 15, 2025

குமரியில் ஒரே நாளில்90 வாகனங்கள் மீது நடவடிக்கை

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மது அருந்தி வாகனம் ஓட்டியவர்கள், அதிபயங்கரமாக வாகனத்தை இயக்கியவர்கள் உட்பட 90 வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

குமரியில் 36 முதல்வர் மருந்தகங்கள்

image

பொது மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யும் வகையில் ஆயிரம் முதல்வர் மருத்துவங்கள் திறக்கப்படும் என சுதந்திர தின உரையில் முதல்வர் தெரிவித்தார். இதையடுத்து குமரி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டர் அறிவுரையின்படி 36 முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கான பணிகள் நடந்து வருகிறது. கூட்டுறவு சங்கம் மூலம் 13 மருந்தகங்களும் தனிநபர் மூலம் 23 மருந்தகங்களும் தொடங்கப்பட உள்ளது.

News February 15, 2025

குமரியில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

image

குமரி மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி 20-ம் தேதி அன்றும், ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 21ஆம் தேதி அன்றும் குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு கோணம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தனித்தனியே பேச்சுப்போட்டிகள் நடத்தப்பெற உள்ளன. இந்தப் போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகளுக்கு பரிசு தொகை வழங்கப்பட இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

News February 15, 2025

குற்றங்களை தடுக்க கிராமங்களில் கேமரா – எஸ்பி

image

குமரி மாவட்டத்தில் குற்ற செயல்களை தடுப்பதற்காக கிராமங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட வேண்டும் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். பெருங்குற்றங்கள் மற்றும் திருட்டு குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களை கண்டறிந்து கண்காணிப்பு கேமரா பொருத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

error: Content is protected !!