Kanyakumari

News February 17, 2025

“கல்வி நிதி வழங்காவிட்டால் மாணவர்களை திரட்டி போராட்டம்”

image

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கையில், மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்த வலியுறுத்தி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய எஸ்எஸ்ஏ கல்வி நிதி ரூ.2500 கோடியை மத்திய அரசு வழங்க மறுக்கிறது. உடனடியாக அந்த நிதியை வழங்க வேண்டும், இல்லை என்றால் மாணவர்கள், இளைஞர்கள் பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.

News February 17, 2025

மின் விபத்துகளைத் தவிர்ப்பது எப்படி? அதிகாரி விளக்கம்

image

குமரி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,’புதிதாக கட்டிடங்கள் கட்டும்போது உயர் மற்றும் தாழ்வழுத்த மின்கம்பி மற்றும் கட்டிடங்களுக்கு இடையே போதிய இடைவெளி உள்ளதா என்பதை உறுதி செய்த பின்னர் செய்ய வேண்டும்; வர்ணம் பூச்சு மற்றும் பூச்சிப் பணிகளுக்காக மரம் மற்றும் இரும்பு கம்பிகளால் சாரம் கட்டும் போது மின் கம்பிகளில் இருந்து போதpய இடைவெளி விடவேண்டும்’ என கூறியுள்ளார்

News February 17, 2025

பைக் ஓட்டிய சிறார்களின் பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை?

image

குமரி மாவட்டத்தில் 18 வயது நிரம்பாத இளையோர் வாகனங்களை ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் 10 சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக போக்குவரத்துக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

News February 17, 2025

தாது மணல் கொள்ளை வழக்கு CBIக்கு மாற்றம்: ஐகோர்ட் உத்தரவு

image

குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் எடுத்த நிறுவனங்களுக்கு எதிரான வழக்கு CBIக்கு மாற்றப்பட்டுள்ளது. விவி மினரல், டிரான்வேல்ட் கார்னெட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக 2015-ல் வழக்கு தொடரப்பட்டது. கொள்ளை வழக்கில், உரிமைத் தொகை ரூ.5,832 கோடியை நிறுவனங்களிடம் வசூலிக்கவும், அவற்றின் வரவு செலவை கணக்கை ஆய்வு செய்யவும் மத்திய அரசுக்ககு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்!

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். ஷேர் செய்யுங்கள்.

News February 17, 2025

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#இன்று(பிப்.17) காலை 9 மணிக்கு இந்து முன்னணி தலைவர் தரணுலிங்க நாடார் பிறந்த நாளை முன்னிட்டு நாகராஜர் திடலில் இருந்து பைக் பேரணி நடக்கிறது.#காலை 10 மணிக்கு நாகர்கோவில் பொன் ஜெஸ்லி கல்லூரி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்கிறார்.#பிற்பகல் 3:30 மணிக்கு திற்பரப்பு பேரூ., அலுவலகம் முன்பு பாஜக சார்பில் திருநந்திக்கரை பகுதி பள்ளத்தை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்.

News February 17, 2025

குமரியில் அதிசய விநாயகர் 

image

குமரி மாவட்டம் கேரளபுரத்தில் கேரளா மற்றும் தமிழ் கலை வடிவில் உருவாக்கப்பட்ட அதிசய விநாயகர் கோயில் உள்ளது. இங்குள்ள விநாயகர் ஆறு மாத காலம் வெள்ளை நிறத்திலும் ஆறு மாத காலம் கருப்பு நிறத்திலும் காட்சியளிக்கும் அதிசய விநாயகர் ஆவார். கேரள வர்மா மகாராஜாவால் இந்த கோயில் நிறுவப்பட்டது என கூறப்படுகிறது. பழமையான இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். SHARE IT.

News February 16, 2025

திருமணமான 4 மாதத்தில் வாலிபர் விபத்தில் பலி

image

திருவட்டாறு, ஆற்றூர் பகுதியை சேர்ந்தவர் ஜோ டேவிஸ் (29). இவர் குழித்துறை சந்திப்பில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். 4 மாதம் முன்பு திருமணம் நடந்து, மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். இன்று காலை மனைவி வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு பைக்கில் செல்லும் போது, பயணம் பகுதியில் சாலையோரம் நிறுத்தி இருந்த லாரியில் மோதி உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News February 16, 2025

குமரி மாவட்ட வெப்பநிலை நிலவரம் வெளியீடு

image

குமரி மாவட்டத்தில் இன்று அதிகபட்சமாக நாகர்கோவில் மற்றும் பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பத்மநாபபுரத்தில் 36 டிகிரி செல்சியசும், குமரி மற்றும் மேல் புறத்தில் 34 டிகிரி செல்சியசும், குழித்துறை மற்றும் கிள்ளியூரில் தலா 33 டிகிரி செல்சியசும், நெய்யூரில் 31 டிகிரி செல்சியசும் வெப்பம் என்று பதிவாகியுள்ளதாக தனியார் வானிலைஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 16, 2025

கோரிக்கை விடுத்த கன்னியாகுமரி எம்பி 

image

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் விஜய் வசந்த் இன்று (பிப் 16) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது, வரலாற்று சிறப்புமிக்க நினைவுச் சின்னங்களை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!