India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழா நாளை(மார்ச் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த கொடை விழா நடைபெறுகிறது. இதனை ஒட்டி திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருவிழா பாதுகாப்பு பணிகளுக்காக நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்ட சேர்ந்த போலீசார் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்று அங்கு திறக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் இன்று நாகர்கோவிலில் கூறியதாவது, “குமரி மாவட்டத்தில் மாறாமலை, ஆனை நிறுத்தி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மலை ஏறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் ஒரு சில மாதங்களில் மலையேற அனுமதி வழங்கப்படும். கன்னியாகுமரி கோவளம் பகுதியில் டால்பின் மற்றும் கடல் ஆமைகள் விளக்க மையம் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பணிகள் நடைபெற்றுவருகிறது” என்றார்.
கருங்கல் அருகே திப்பிரமலை அருகே கண்ணன் விளையை சேர்ந்தவர் ஜெகன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி அனுஷா. இவர்கள் இருவரும் வீட்டில் நேற்று கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் அவர்களை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். இது தொடர்பாக கருங்கல் போலீசார் நேற்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டத்தில் திருட்டு மற்றும் வன்முறைச் சம்பவம் தடுப்பதற்காக ஒவ்வொரு டிவிசன்களுக்கும் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தனிப்படைகளை கலைத்துள்ள குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின், அவர்களை காவல் நிலையங்களில் பணிபுரிய அவர் உத்தரவிட்டுள்ளார். இதே போன்று எஸ்.பி. தனிப்பிரிவில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர்களும் காவல் நிலையங்களுக்கு அனுப்பப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை சார்பில் இன்று(மார்ச் 1) முதல் 4ஆம் தேதி வரை வடசேரி மாவட்ட வன அலுவலகத்தில் புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வகை உயிரினங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி நடைபெறுவதாக மாவட்ட வன அலுவலர் பிரசாந்த் நேற்று தெரிவித்தார். SHARE IT.
கன்னியாகுமரி மாவட்ட பாஜக மூத்த நிர்வாகி குமரி ப.ரமேஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.4,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து, ஒரு எம்பி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டவர் எனக்கூறி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கி இந்த கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு ஆகியவைகளை வழங்குகிறார்.
குமரி விவேகானந்த கேந்திராவில் யோகா சாஸ்திர சங்கமம் 8வது ஆண்டு தொடக்க விழா நேற்று(பிப்.28) நடந்தது. விவேகானந்த கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் யோகா பயிற்சி கையேடு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதனை கோட்டயம் ஹரி லட்சுமீந்திரகுமார், பேராசிரியர் பத்மநாபன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மார்ச் 3ஆம் தேதி தொடங்கும் +2 பொதுத்தேர்வை எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நடத்த வேண்டும். தேர்வெழுத வரும் மாணவ மாணவிகளுக்கான குடிநீர், மின்சாரம், முதலுதவி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். வினாதாள்களை பாதுகாப்புடன், தாமதமின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என குமரி கலெக்டர் அழகு மீனா அதிகாரிகளுக்கு நேற்று(பிப்.28) உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் குளிர்கால மழை வழக்கத்தை விடவும் மிக மிக குறைவாக பெய்துள்ளது. மாவட்டத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை குளிர்கால மழை அளவு சராசரி 38.8 மி.மீ ஆகும்.ஆனால் இந்த ஆண்டு குளிர் காலத்தில் 6.5 மி.மீ என்ற அளவில் மட்டுமே பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு அறவே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.