India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மண்டைக்காடு அருள்மிகு பகவதி அம்மன் கோவில் 10 நாள் கொடை விழா நேற்று(மார்ச் 2) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாள் திருவிழாவையொட்டி கோவில் பகுதியில் 9,000 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் மண்டைக்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனர்.
சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமியின் அவதார தின விழா நாளை நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நெல்லை, குமரி, தூத்துக்குடி உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அய்யாவழி பக்தர்கள் இன்று இரவு நாகர்கோவில் வருகிறார்கள். நாளை காலை நாகர்கோவில் நாகராஜர் திடலில் இருந்து சுவாமி தோப்புக்கு அவதார தின விழா ஊர்வலம் நடக்கிறது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ‘அய்யா ஹர ஹர..அய்யா சிவ சிவ’ என பாடியவராறு செல்வர்.
#இன்று(மார்ச் 3) காலை 9 மணிக்கு கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் தனித்துறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி மண்டபம் முன்பிருந்து சென்னை கோட்டை வரை பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது.#பிற்பகல் 3 மணிக்கு குளச்சல், மணவாளக்குறிச்சி, இரணியல் உட்பட 7 இடங்களில் இருந்து திருச்செந்தூர் கோவிலுக்கு காவடி புறப்பட்டு செல்கிறது.#காலை 9 மணிக்கு வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் +2 தேர்வு இன்று (மார்ச்.03) தொடங்குகிறது. இந்த தேர்வை 22 ஆயிரத்து 461 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டம் முழுவதிலும் 85 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வின் போது மாணவர்கள் காப்பியடிப்பதை தவிர்க்க பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் மாவட்டம் முழுவதிலும் பள்ளிகளில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர்.
“குமரி மாவட்டம், கிள்ளியூர் வட்டம், இணையம் புத்தன்துறை மீனவ கிராமத்தில் நேற்று (1.3.2025) ஏணியை இடமாற்றம் செய்யும் போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இணையம்புத்தன்துறை ஊராட்சிக்குட்பட்ட, புத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவின் போது கொண்டு சென்ற ஏணி உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில் மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களது இறுதி சடங்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அவர்களது குடும்பத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ. 1 லட்சம் நிதி உதவி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் இன்று வழங்கினார்.
மார்த்தாண்டத்தை சேர்ந்த 30 வயது பெண் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் கோடிமுனையை சேர்ந்த ராபர்ட் டில்டன் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரது நடவடிக்கை பிடிக்காததால் அந்தப் பெண் விலகி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராபர்ட் டில்டன் இளம்பெண் புகைப்படத்தை மார்ஃபிங் செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இளம்பெண் அளித்த புகாரி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நாகர்கோவில் எஸ் எல் பி மேல்நிலைப் பள்ளியில் கடந்த 11 நாட்களாக ஆறாவது புத்தகத் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த விழாவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த நிலையில், கடந்த 11 நாட்களில் சுமார் 70 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான புத்தகங்கள் விற்பனையானதாக மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று (மார்ச்-1) கூறினார்.
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இணையம் புத்தம் துறை மீனவர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைத்தேன்; அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், பொது நிவாரண நிதியில் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டு உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
குமரி, இணையம் புத்தன் துறை மீனவ கிராமத்தில் புனித அந்தோனியார் தேவாலய திருவிழா நடந்து வருகிறது. அலங்காரப் பணிகளை மேற்கொள்ள உயரமான இரும்பு ஏணியை தூக்கி சென்ற நிலையில், மின் லைனில் ஏணிப்பட்டு மைக்கேல் பிந்து, மரிய விஜயன், அருள் சோபன், ஜஸ்டஸ் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக புதுக்கடை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.