Kanyakumari

News September 20, 2025

குமரி: சிறுமி பாலியல் தாக்குதல் வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

image

கடந்த 2016ம் ஆண்டு ராஜாக்கமங்கலம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் தாக்குதல் செய்த கீழ சங்கரன் குழி பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (43) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் இன்று தீர்ப்பு கூறியது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

News September 20, 2025

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் குளிர்சாதன பயணிகள் அறை

image

நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் குளிர்சாதன வசதி அடங்கிய பயணிகள் காத்திருக்கும் அறை திறக்கபட்டுள்ளது. இங்கு ஒரு மணி நேரம் தங்கியிருக்க ரூ.30 கட்டணம்நிர்ணயம் செய்யபட்டுள்ளது. நாகர்கோயில் சந்திப்பு ரெயில் நிலையத்தின் முதலாவது பிளாட்பாரத்தில் பயணிகளின் வசதிக்காக குளிர் சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருக்கும் அறை அமைக்கபட்டுள்ளது.

News September 19, 2025

குமரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

குமரி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News September 19, 2025

குமரி: முகாமை தொடங்கி வைத்த எம்.பி

image

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (செப். 19) நடைபெற்றது.
முகாமை கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துக்கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

News September 19, 2025

குமரியில் 17 பெற்றோர்கள் மீது வழக்கு

image

குமரி: போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீதும், விபத்துகளை தடுக்கும் வகையிலும் போக்குவரத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் 6 சிறார்கள் ஓட்டி வந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர். கடந்த 5 நாட்களில் மட்டும் 17 சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

News September 19, 2025

குமரி: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க…

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என நான்கு வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ), சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்.
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்.
NPHH: சில பொருட்கள் மட்டும்.. உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய <>இங்கு க்ளிக் செய்யுங்க<<>>…மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950. எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News September 19, 2025

குமரி: நாளை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்

image

கோட்டயம்- சிங்கவனம் இடையே பாலம் பராமரிப்பு பணியையொட்டி நாளை (செப் 19) ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது ரெயில் எண் 12624 திருவனந்தபுரம்-சென்னை சென்டிரல் அதிவேக ரெயில் ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 22503, ரெயில் எண் 16343, ரெயில் எண் 16347 ஆலப்புழை வழியாக இயக்கம்; ரெயில் எண் 16366) நாகர்கோவில் – கோட்டயம் ரெயில் சங்கனாச்சேரி வரை இயக்கக்கபடுகிறது.

News September 19, 2025

குமரி: மக்களே இந்த அதிசய காட்சியை காணத்தவறாதீர்கள்

image

திருவட்டாறில் 108 வைணவத்தலங்களில் ஒன்றான ஆதிகேசவப்பெருமாள் ஆலயம் உள்ளது. பெருமாளுக்கு உகந்த  புரட்டாசி மாதம் 3, 4, 5 தேதிகளில் சூரியன் மேற்குப்பகுதியில் மறையும் போது சூரியனின் செங்கதிர்கள் கோவில் கருவறையில் பாம்பணையில் பள்ளி கொண்டிருக்கும் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில்  விழும் வகையில் கோயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த அதிசய ஒளியை செப்.19, 20, 21 தேதி மாலையில் தரிசிக்கலாம். 

News September 19, 2025

குமரி: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

image

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News September 19, 2025

நாகர்கோவில்: மருமகளின் காதை கடித்த மாமியார்

image

நாகர்கோவில்: சாய்கோடு பகுதியைச் சேர்ந்த தமபதியினர் பிரின்ஸ் – மஞ்சு. மஞ்சு தனது கணவரின் குடிப்பழக்கைத்தை பற்றி பேசினால் மகனை தவறாக பேசாதே என்று மருமகளிடம் அல்போன்சா சண்டை போடுவாராம். நேற்று முன்தினம் மாலை பிரின்ஸ் மற்றும் மஞ்சு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மஞ்சுவுடன் அல்போன்சா தகராறில் ஈடுபட்டதோடு கல்லால் அவரது முகத்தில் அடித்து காதை கடித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு.

error: Content is protected !!