India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

காஞ்சப்புறம் தொழிலாளி கிருஷ்ணகுமார் (55). நேற்று (செப். 20) காலை மஞ்சதோப்பு சுப்ரமணியசாமி கோவிலின் அருகே நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த அதே பகுதி உறவினர் ரமேஷ்குமார், கிருஷ்ணகுமாரை பார்த்து தகாத வார்த்தைகளால் பேசி கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். கிருஷ்ணகுமார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். நித்திரவிளை போலீசார் ரமேஷ்குமாரை கைது செய்தனர்.

குமரி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. கடைசி தேதி – செப். 23 ஆகும். மேலும் விவரங்களுக்கு<

குமரி: செம்பொன்விளை, முட்டம், கருங்கல், சேரமங்கலம் ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (செப். 22) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படுகிறது. நாளை குமரி மாவட்டத்தில் எங்கெல்லாம் மின்தடை என <

கன்னியாகுமரி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள டெமொகிராடிக் கரப்ஷன் லிபரேஷன் பிரண்ட் கட்சி, தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி, உலக மக்கள் கட்சி ஆகியன 2021-22, 2022-23, 2023-24 வரையிலான நிதியாண்டுக்கான வருடாந்திர கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் உரிய காலத்தில் சமர்பிக்கவில்லை. எனவே உரிய ஆவணங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் அவர்கள் நேரில் ஆஜராகுமாறு மாவட்ட ஆட்சியர் அழகுமீனா உத்தரவிட்டுள்ளார்.

குமரி மக்களே, இந்திரா காந்தி சர்வதேச விமானப் சேவைகள் நிறுவனத்தில் காலியாக உள்ள 1446 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10 & 12ம் வகுப்பு முடித்த, 18-30 வயதுக்குட்பட்ட நபர்கள் <

குமரி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 (468+21) காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 21க்குள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நவம்பர் மாதத்தில் தேர்வு நடைபெறும். சம்பளம் (Approx) ரூ.48,000 – ரூ.1,00,000 வரை. டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

கடந்த 2016ம் ஆண்டு ராஜாக்கமங்கலம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கீழ சங்கரன் குழி பகுதியை சேர்ந்த சந்தனக்குமார் (43) என்பவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிறப்பாக நடத்திய அதிகாரிகளை மாவட்ட எஸ்பி ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.குமரி- 9445000391
2.அகஸ்தீஸ்வரம் – 9445000392
3.தோவாளை- 9445000393
4.கல்குலம்- 9445000394
5.விளவங்கோடு- 9445000395
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

ஆம்பாடி அருகே நேற்று மதியம் தனியார் ரப்பர் தோட்டத்தில் செங்குழிக்கரை அல்போன்ஸ்(58) என்ற தொழிலாளி ரப்பர் மரத்தில் இருந்து பால் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாறையில் மறைந்திருந்த சிறுத்தை அவர் மீது பாய்ந்ததும் அவர் அலறவே, சத்தம் கேட்டு பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வர சிறுத்தை தப்பி ஓடிய நிலையில் அதிர்ஷடவசமாக அவர் உயிர்தப்பினார். சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

குமரி மக்களே, தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்காக 3,665 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. விண்ணப்பிக்க கடைசி தேதி நாளையுடன் (செப். 21) முடிவடைகிறது. கல்வி தகுதி – 10வது தேர்ச்சி. 18 வயது நிரம்பியவர்கள் இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.18,200 முதல் 67,100 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.