Kanyakumari

News March 1, 2025

பொன் ராதாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து

image

கன்னியாகுமரி மாவட்ட பாஜக மூத்த நிர்வாகி குமரி ப.ரமேஷ் இன்று வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.4,000 கோடிக்கு வளர்ச்சித் திட்டங்களை கொண்டு வந்து, ஒரு எம்பி எப்படி செயல்பட வேண்டுமோ அப்படி செயல்பட்டவர் எனக்கூறி முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

News March 1, 2025

நாகர்கோவில் புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு

image

நாகர்கோவில் எஸ்எல்பி மேல்நிலைப் பள்ளியில் புத்தகக் கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 19ஆம் தேதி தொடங்கி இந்த கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா கலந்து கொண்டு, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ், அரங்குகள் அமைத்தவர்களுக்கு பரிசு ஆகியவைகளை வழங்குகிறார்.

News March 1, 2025

குமரியில் யோகா பயிற்சி கையேடு வெளியிட்ட கேரள கவர்னர்

image

குமரி விவேகானந்த கேந்திராவில் யோகா சாஸ்திர சங்கமம் 8வது ஆண்டு தொடக்க விழா நேற்று(பிப்.28) நடந்தது. விவேகானந்த கேந்திரா தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் யோகா பயிற்சி கையேடு என்ற புத்தகத்தை வெளியிட்டார். அதனை கோட்டயம் ஹரி லட்சுமீந்திரகுமார், பேராசிரியர் பத்மநாபன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

News March 1, 2025

+2 பொதுத்தேர்வு: குமரி கலெக்டர் உத்தரவு

image

மார்ச் 3ஆம் தேதி தொடங்கும் +2 பொதுத்தேர்வை எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நடத்த வேண்டும். தேர்வெழுத வரும் மாணவ மாணவிகளுக்கான குடிநீர், மின்சாரம், முதலுதவி, மாற்றுத்திறன் மாணவர்களுக்கான வசதிகள் என அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். வினாதாள்களை பாதுகாப்புடன், தாமதமின்றி எடுத்துச் செல்வதை உறுதி செய்ய வேண்டும் என குமரி கலெக்டர் அழகு மீனா அதிகாரிகளுக்கு நேற்று(பிப்.28) உத்தரவிட்டுள்ளார்.

News March 1, 2025

குமரியில் குளிர்கால மழை அளவு மிகக் குறைவு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளிர்கால மழை வழக்கத்தை விடவும் மிக மிக குறைவாக பெய்துள்ளது. மாவட்டத்தில் ஜனவரி 1ஆம் தேதி முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை குளிர்கால மழை அளவு சராசரி 38.8 மி.மீ ஆகும்.ஆனால் இந்த ஆண்டு குளிர் காலத்தில் 6.5 மி.மீ என்ற அளவில் மட்டுமே பதிவாகி உள்ளது. மாவட்டத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு அறவே இல்லை என்று தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News February 28, 2025

குமரியில் பிறந்து ரூ.100 கோடி படத்திற்கு திரைக்கதை எழுதியவர்

image

தமிழின் முக்கிய எழுத்தாளர்களில் ஒருவரான ஜெயமோகனுக்கு சொந்த ஊர் விளவங்கோட்டில் உள்ள திருவரம்பு தான். முழுக்கோடு மற்றும் அருமனையில் தனது பள்ளி படிப்பை முடித்தார். எழுத்துக்காக பல்வேறு விருதுகளை வாங்கியவர், சினிமாவிலும் திரைக்கதை எழுதி வருகிறார். கௌதம்மேனனுடன் இவர் இணைந்து திரைக்கதை எழுதிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரூ.100 கோடி வசூலை ஈட்டியது. *இவரை பற்றி தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க*

News February 28, 2025

குமரி விவசாயிகளுக்கு அடையாள அட்டை

image

குமரி மாவட்டத்தில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு அடையாள எண் அட்டை வழங்கும் திட்டத்தில் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டத்தில் ஒரு லட்சத்து 98 ஆயிரம் விவசாயிகளை இந்தத் திட்டத்தில் சேர்த்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என்றும், திட்டம் தொடங்கப்பட்ட 18 நாட்களில் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

News February 28, 2025

புள்ளியியல் துறை ஆய்வுக்கு ஒத்துழைக்க வேண்டுகோள்!

image

குமரி ஆட்சியர் அழகு மீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையால் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்படுகிறது. குடும்பங்களின் உடல் நலத்திற்கான நுகர்வு செலவு பற்றிய விபரங்கள் ஜனவரி முதல் டிசம்பர் வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 16 நகரப் பகுதிகள் மற்றும் 8 கிராம பகுதிகளில் துறை அலுவலர்களால் சேகரிக்கப்பட உள்ளன. இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 28, 2025

குமரி மக்களே இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க

image

செண்பகராமன்புதூரில் அமைந்துள்ள தென்னை மதிப்புக்கூட்டு மையத்தில் எண்ணெய் பிழிந்தெடுக்கும் 4 மரச்செக்கு அலகுகள் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்த மரச்செக்குகளை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து நடத்த விருப்பமுள்ளவர்கள் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்வணிகத்துறை அலுவலர்களை 99443569945, 9344168207 மற்றும் 9597450349 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என வேளாண்மை துணை இயக்குநர் இன்று கூறியுள்ளார்

News February 28, 2025

கேரள கவர்னர் இன்று கன்னியாகுமரி வந்தார்

image

கேரளா கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் திருவனந்தபுரத்தில் இருந்து கார் மூலம் இன்று (பிப்.28) கன்னியாகுமரி வந்தார். அங்குள்ள விவேகானந்த கேந்திராவுக்கு வந்த அவருக்கு குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி பூங்கொத்து கொடுத்து கவர்னரை வரவேற்றார். இதில் விவேகானந்த கேந்திர நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!