India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி கடலில் இன்று(அக்.,16) காலை கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. நடுக்கடலில் இருந்து பொங்கி எழுந்து வந்த ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக கரையை நோக்கி வந்து வீசிவிட்டு சென்றன. இந்த ராட்சத அலையினால் கன்னியாகுமரி கடலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா போலீசார் கடற்கரை பகுதியை சுற்றி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் to நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் விருதாச்சலம், திருச்சி, மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக நாகர்கோவில் வந்து சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து இதே வழியில் சென்னை சென்ட்ரலுக்கு ரயில் புறப்பட்டுச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அணைக்கு 505 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 267 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 551, பெருஞ்சாணி அணையில் இருந்து 160 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. நேற்று பேச்சிப்பாறை அணைக்கு 564, பெருஞ்சாணி அணைக்கு 285 கன அடியும் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல் சேலம் ஜோலார்பேட்டை பெங்களூர் வழியாக இந்த ரயில் இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து நவ.,2ஆம் தேதியும் மைசூரில் இருந்து நவ.,3ம் தேதியும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது
வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசு கண்காணிப்பு அதிகாரி ஹனீஷ் சாப்ரா நேற்று இரவு கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா மற்றும் அதிகாரிகளும் சென்றனர். அவர்களிடம் அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். பாதிப்பை தடுக்க அறிவுரைகளும் வழங்கினார்.
குமரி அழிக்கால் கடலில் இன்று நள்ளிரவு பயங்கர கடல் சீற்றம் ஏற்பட்டது. ஆக்ரோஷமாக சீறிய அலைகள் தண்ணீருடன் மணலையும் சுருட்டியபடி கடற்கரையொட்டி உள்ள வீடுகளுக்குள் புகுந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் வீடுகளில் இருந்துவெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர். மேடான பகுதிகளிலும், வீட்டு மாடியிலும் தஞ்சம் அடைந்தனர். தொடர்ந்து கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து விடாமல் மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
குமரி மாவட்டம் கீரிப்பாறை லேபர் காலணி பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதியில் ஒரு ஆட்டை சிறுத்தை இழுத்து சென்று விட்டதாகவும் தகவல் பரவியது. விசாரணையில், இந்த தகவல் முற்றிலும் தவறு என்றும் தாங்கள் அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டதில் சிறுத்தை நடமாட்டம் இல்லை எனவும், ஆகவே கீரிப்பாறை சுற்று வட்டார மக்கள் சிறுத்தை குறித்து பீதி அடைய வேண்டாம் என குமரி மாவட்ட வனத்துறை அறிவித்துள்ளது.
புனேயில் இருந்து நேற்று நாகர்கோவில் வந்த ரயிலில் ரயில்வே பாதுகாப்பு போலீசார் நடத்திய சோதனையில் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியின் இருக்கைக்கு கீழ் பேக் கேட்பாரற்று கிடந்தது. இதனை போலீசார் திறந்து பார்த்தபோது 7 பொட்டலங்களில் 4 கிலோ அளவுக்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார் கடத்தி வரப்பட்ட கஞ்சா குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக நெல்லை சரக டிஐஜி 4 மாவட்ட எஸ்.பிகளுடன் ஆலோசனை நடத்தினார். திருநெல்வேலி காவல் சரகத்தின் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் டிஐஜி மூர்த்தி தலைமையில் நடந்தது. அதில் திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி.,க்கள் நேரடியாக கலந்து கொண்டதாக இன்று நாகர்கோவில் எஸ் பி அலுவலக செய்தி குரூப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 260 தென்னை விவசாயிகள் 350 ஏக்கர் இன்சூரன்ஸ் செய்து உள்ளதாக மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பீபி ஜான் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்ந்து, மாவட்டத்தில் நெல் விவசாயிகள் இன்சூரன்ஸ் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்றும், இழப்பீடு மிக குறைவாக கிடைப்பதால் அவர்கள் இதில் ஆர்வம் காட்டவில்லை என்றும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.