India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று(அக்.,19) காலையில் இருந்தே தீவிர வாகன சோதனை நடந்தது. போக்குவரத்து விதிகளை மீறிய 627 பேர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களில் 200க்கு மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், செல்போன் டிரைவிங், அதிகவேகம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்தனர்.
தக்கலை, நாகர்கோவில், மார்த்தாண்டம், குமரி பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் தீபாவளி சிறப்பு விற்பனை நடக்கிறது. பருத்தி, பட்டுகளுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது. 11 மாத சந்தாதொகை செலுத்தினால் 12வது மாத சந்தாவை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, 30% தள்ளுபடியில் துணிகள் பெறும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம் என நெல்லை மண்டல கோ-ஆப்டெக்ஸ் மேலாளர் ராஜேஷ்குமார் நேற்று கூறியுள்ளார். SHARE IT.
குமரியில் கடந்த 15-10-2024, 16-10-2024, 17-10-2024 ஆகிய நாட்களில் ஏற்பட்ட கள்ளக் கடல் சீற்றத்தினால் குறும்பனை முதல் நீரோடித்துறை வரை உள்ள கடற்கரை கிராமங்கள் மற்றும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகம் இரையுமன்துறை பகுதிகள் பாதிக்கப்பட்டன. இதனை உடனடியாக சீரமைக்க கேட்டு குமரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் இன்று இரவு கோரிக்கை மனு வழங்கினார்.
குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த கழகத்தின் மாநில மருத்துவர் அணி தலைவர் கனிமொழியை, திமுக மாநில மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் எழிலன் மற்றும் சூர்யா கிருஷ்ணமூர்த்தி ஆகியோரை குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வரவேற்றார். அவர்களுடன் மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
குமரி மாவட்டம் பொய்கை அணை பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கரடிகளின் நடமாட்டம் இருந்து வருகிறது. அணை பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் இதனை பார்வையிட்டுள்ளனர். கரடிகள் நடமாடுவதை கண்டவர்கள் அங்கிருந்து திரும்பி விட்டனர். கரடி நடமாட்டத்தால் அங்கு விவசாயிகள் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நிலையில், மீண்டும் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது,மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திடம், நாங்கள் கேட்கிறோம், தூர்தர்ஷனில் மதபிரச்சார கருத்துக்களை ஒளிபரப்புவதற்கு ஈடாக, தினமும் மாலை பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் கருத்துக்களை ஒளிபரப்ப வேண்டும், ஒளிபரப்ப திராணி இருக்கிறதா? என்று அதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஆகவே கடற்கரை பகுதிகளில் கடலில் 200 நாட்டிக்கல் மைல் தூரம் தாண்டி மீன்பிடிக்கும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் கடல்சார் அதிகாரிகளுக்கும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அழகு மீனா அறிவுறுத்தி உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாக இருப்பதாக புகார்கள் கூறப்பட்ட நிலையில் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற ஆய்வில் மாவட்டத்தில் 101 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முன்னாள் அமைச்சரும் பத்மநாபபுரம் MLA மனோ தங்கராஜ் இன்று(அக்.18) வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடியது குறித்து கூறியிருப்பதாவது தூர்தர்சன் ஆளுநரிடம் மன்னிப்பு கேட்பது வேடிக்கை!தூர்தர்ஷனும் ஆளுநரும் சேர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டியது புண்படுத்தப்பட்ட தமிழ்நாடு மக்களிடம்! என்று அதில் கூறியுள்ளார்.
காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு எலக்ட்ரிகல் பஸ் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பஸ் 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் இயக்கப்படுகிறது. முதல் முறையாக அறிமுக இந்த பஸ் இன்று(அக்.18) கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை முடியும் சீரோபாயிண்ட் பகுதிக்கு வந்தடைந்தது. இந்த பஸ்சை விஜய் வசந்த் எம்.பி தலைமையில் மாணவ மாணவிகள் வரவேற்றனர். இதில் கன்னியாகுமரி பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் உட்பட பலர் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.