Kanyakumari

News October 9, 2025

குமரி மாவட்ட ஆட்சியருக்கு நல்லாளுமை விருது

image

வரலாற்று சிறப்புமிக்க கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை முதல் விவேகானந்தர் பாறை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்ணாடி கொண்டு பாலம் அமைக்க துவங்கிய நாள் முதல் அனைத்து பணிகளையும் சிறப்பாக செயல்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தியதற்காக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவிற்கு சென்னையில் நல்லாளுமை விருது இன்று வழங்கப்பட்டது.

News October 9, 2025

குமரி மாவட்ட காவல் துறை – இன்று இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல் துறை அறிவிப்பு இன்று (08.10.2025) இரவு ரோந்துப் பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாவட்ட ரோந்து பொறுப்பில் டி.எஸ்.பி நந்தி சாமி தலைமையில் நாகர்கோவில், சக்கரை, மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி பிரிவுகளில் SSI, HC அதிகாரிகள் பணியில் ஈடுபடுவார்கள். அவசர தொடர்பு எண்: 04652-220417.

News October 8, 2025

பெண்ணை தாக்கிய மாமியார், மாமனார் மீது வழக்கு

image

நட்டாலம் நிதீஷ்குமார் – சௌமியா தம்பதியர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சௌமியா கணவர் வீட்டில் நட்டாலத்திலும், நிதீஷ்குமார் சென்னையிலும் தங்கி வேலை பார்க்கின்றனர். சௌமியாவின் கணவரின் தம்பி நவீன் குமார், மாமியார் ரோஸ்லட், மாமனார் சாம்ராஜ் ஆகியோர் சௌமியாவை தாக்கி காயப்படுத்தினர். செளம்யா ஆஸ்பத்திரியில் அனுமதி. மார்த்தாண்டம் போலீசார் செளமியாவை தாக்கிய 3 பேர் மீதும் இன்று வழக்கு பதிந்தனர்.

News October 8, 2025

குமரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000!

image

பெண் குழந்தைகளுக்கு ‘முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்’ மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு குமரி மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News October 8, 2025

குழித்துறை: நகை பறித்த 2 பேருக்கு சிறை

image

நித்திரவிளை முக்காட்டுவிளையை சேர்ந்த பிரமிளா(33) 2022 ஆம் ஆண்டில் ஸ்கூட்டரில் வீட்டுக்கு செல்லும்போது பைக்கில் பின் தொடர்ந்த கேரளா கொல்லம் ரவிபுரம் செய்யதலி(22), மாஹீன்(21) ஆகியோர் பிரமிளாவின் ஐந்தரை பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். குழித்துறை நடுவர் கோர்ட்டில் நடந்த வழக்கில் நேற்று நீதிபதி மகேஷ்குமார் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.5000 அபராதத்துடன் தீர்ப்பளித்தார்.

News October 8, 2025

குமரி: அன்புமணி நடைப்பயணத்திற்கு மறுப்பு

image

பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று நாகர்கோவில் வடசேரி வஞ்சி ஆதித்தன் புதுத் தெருவில் இருந்து அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு வரை தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைப்பயணம் மேற்கொள்ள பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் நடைப்பயணத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. ஆனால் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கியுள்ளது.

News October 8, 2025

குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

image

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக்.8) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 39.97 அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 58.74 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 6.72 அடி (18 அடி), சிற்றாறு 2 அணை 6.82 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 428 கனஅடி, பெருஞ்சாணிக்கு 272 கனஅடி நீர்வரத்தும் உள்ளது.

News October 8, 2025

குமரியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் செண்பகராமன் புதூர் , புதுக்கடை, குழித்துறை ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(அக்.9) மாதாந்திர பாரமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதே போல் நாளை மறுநாள்(அக்.10) வீயன்னூர், பேச்சிப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை இத்துணைமின் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது. SHARE IT

News October 8, 2025

குமரியில் 8 ரவுடிகள் கைது

image

குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் குற்றத்தை தடுக்கவும், குற்றம் நடக்காமல் காக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் நேற்று (அக்.8) ஒரே நாளில் ரவுடிப் பட்டியலில் உள்ள
நாகர்கோவில் நெசவாளர் காலனி வருண்(37), கீழஆசாரிபள்ளம் கிறிஸ்டோவினேஷ் (33), அறுகுவிளை லிங்கம் (45), புத்தன்துறை கண்ணன் (38), ரஞ்சித்பிரேம், அஜீஸ், பிரசாந்த் ஸ்டாலின் என்ற சாலி உள்பட 8 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 8, 2025

குமரி: ரகசிய தகவலால் சிக்கிய கடத்தல் கும்பல்

image

தூத்துக்குடியில் இருந்து குமரி வழியாக கேரளாவுக்கு திமிங்கல உமில்நீர் கட்டி கடத்தப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி திருப்பதிசாரம் பகுதியில் வந்த மினிடெம்போவை சோதனையிட்டதில் அதில் 40 கிலோ திமிங்கல உமில்நீர் கட்டி கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு பல கோடி இருக்கும் என கூறப்பட்ட நிலையில் தனுஷ்(32), தினேஷ்(27), ரதீஷ்குமார்(42) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!