Kanyakumari

News April 5, 2024

தோவாளை: காரில் கொண்டு வந்த ரூ.14 லட்சம் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று(ஏப்.4) தோவாளை அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தோவாளையை சேர்ந்த அஜய்காந்த் என்பவரின் காரை சோதனை செய்ததில் ரூ.14 லட்சம் இருந்தது தெரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News April 4, 2024

பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளை தடுக்க, இன்று பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் சேவை நீட்டிப்பு

image

வியாழக்கிழமைகள்தோறும் இயக்கப்பட்டு வந்த, சென்னை – நாகர்கோவில் வந்தேபாரத் சிறப்பு ரயில் சேவை ஏப்ரல் 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து காலை 5.15க்கு புறப்படும் ரயில் மதியம் 2.10க்கு நாகர்கோவில் சென்றடையும்; நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.10க்கு புறப்படும் ரயில் இரவு 11.45 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.

News April 4, 2024

கிள்ளியூர்: I.N.D.I.A கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின், கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி I.N.D.I.A கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் தலைமை தேர்தல் அலுவலகத்தில், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தலைமையில் நேற்று(ஏப்.3) இரவு நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி கூட்டணி வேட்பாளர் விஜய் வசந்த் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

குமரி அருகே பிரபல நடிகை வாக்கு சேகரிப்பு

image

குமரி மாவட்டம் மகாராஜபுரம் ஊராட்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் பசலியான் நசரேத்தை ஆதரித்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு அதிமுக நட்சத்திர பேச்சாளர் காயத்ரி ரகுராம் நேற்று வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் தாமரை தினேஷ், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒ.செயலாளர் எஸ்.ஜெஸீம், மகாராஜபுரம் ஊராட்சி தலைவர் இசக்கிமுத்து உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

News April 3, 2024

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மழை

image

நடப்பாண்டில் கோடைகாலத்தில் வழக்கத்தை விட அதிக வெப்பம் பதிவாகும் சூழல் உள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 3, 2024

குமரி: கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்பு துவக்கம்

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
குமரி மாவட்ட பிரிவு சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கியது. இந்த பயிற்சி ஜூன் 26ம் தேதி வரை 6 கட்டங்களாக நடத்தப்படுகிறது. நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியம். நீச்சல் குளத்தில் நடக்கும் இந்த பயிற்சி வகுப்பு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என தனித்தனியே நடத்தப்படுகிறது. என மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

News April 3, 2024

குமரியில் 10 மணி வரை மழை!

image

நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்று(ஏப்.3) காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்களில், காற்றின் திசை மாறுபடும். இதன் காரணமாக, இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News April 2, 2024

குமரி அருகே இளைஞர் தற்கொலை

image

குமரி மாவட்டம் இரணியல் அருகே வலிய ஏலா பகுதியில் இன்று காலை இளைஞர் ஒருவர் இறந்த நிலையில் காணப்பட்டார். இறந்தவர் பரசேரியை சார்ந்த வினீஷ்குமார் என்பதும் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இரணியல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News April 2, 2024

ஏப்ரல் 5இல் அமித்ஷா குமரிக்கு வருகை

image

கன்னியாகுமரி மாவட்ட பாஜக அணி/பிரிவு மையக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமையில் நேற்று (ஏப்ரல் 1) மாலை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கன்னியாகுமரி நாடாளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், விளவங்கோடு சட்டமன்ற வேட்பாளர் நந்தினி ஆகியோருக்கு வாக்கு சேகரிக்க ஏப்ரல் 5ஆம் தேதி தக்கலைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.