Kanyakumari

News April 7, 2024

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையா..?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

கன்னியாகுமரி: உங்கள் தொகுதி வேட்பாளர் பற்றி தெரியுமா?

image

உங்கள் தொகுதியில் போட்டியிடும் நட்சத்திர வேட்பாளர் முதல் சுயேட்சை வேட்பாளர்கள் வரை, அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள், குற்ற வழக்குகள், வழங்கப்பட்ட குற்றத்தண்டனை, சொத்துமதிப்பு, கல்வித்தகுதி போன்ற முழுதகவல்களையும் தெரிந்துகொள்ள <>https://affidavit.eci.gov.in/<<>> என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து தெரிந்துகொள்ளலாம். அல்லது ப்ளே ஸ்டோரில் KYC என்ற செயலி மூலமும் தெரிந்து கொள்ளலாம்.

News April 7, 2024

குமரியில் செல்வப்பெருந்தகை பிரச்சாரம்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று(ஏப்.6) விளவங்கோடு, நாகர்கோவில் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், திமுக கூட்டணியில் உள்ள காங். சார்பில் குமரி தொகுதியில் விஜய் வசந்த் எம்பி மற்றும் விளங்கோடு சட்டமன்ற இடைத் தேர்தலில் தாரகை கர்பர்ட் ஆகியோர் வேட்பாளர்களாக களம் இளங்குகின்றனர்.

News April 7, 2024

குமரி: அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் I.N.D.I.A கட்சிகள் சார்பில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் நேற்று(ஏப்.6) இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி ஆலோசனைகள் வழங்கினார். கூட்டணி கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News April 6, 2024

கன்னியாகுமரி அருகே விபத்து

image

குமரி மாவட்டம் நாகர்கோவில்- திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோட்டியோடு அருகே இன்று மதியம் இருசக்கர வாகனம் மீது டாரஸ் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர் காயங்கள் ஏதுமின்றி தப்பினார். இருசக்கர வாகனம் சேதமடைந்தது. தகவல் அறிந்த அங்கு வந்த இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 6, 2024

பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை வெளியீடு

image

குமரி மக்களவைத் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, 199 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும், மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் என எதுவும் இல்லை என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

News April 6, 2024

பெங்களூர் ஆட்டோ ஓட்டுநர் குமரியில் திடீர் சாவு

image

திருவட்டார் அடுத்த மாத்தாரைச் சேர்ந்தவர் ஆபிரகாம்(50). இவர் பெங்களூருவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் கடந்த மாதம் 31ம் தேதி பெங்களூரில் இருந்து புறப்பட்டு மாத்தாரில் உள்ள உறவினரான சுரேஷ் என்பவர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு தங்கியிருந்த நிலையில், ஏப்.4ம் தேதி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் நேற்று உயிரிழந்தார்.

News April 6, 2024

நாகர்கோவிலில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

குமரி மாவட்டம் நாகர்கோவிலில் நேற்று(ஏப்.6) I.N.D.I.A கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய விஜய்வசந்த், “பார்ட் டைம் எம்பி என பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார்; ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்பியாக பணியாற்றினேன்; அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்தெடுங்கள் என்றார்.

News April 5, 2024

நாகர்கோவிலில் இந்தியா கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம்

image

பார்ட் டைம் எம்பி என்று பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் கிண்டல் செய்கிறார். ஆமாம் நான் இரண்டரை ஆண்டுகள் மட்டும்தான் எம்.பி.யாக பணியாற்றினேன் அதனால் என்னை ஃபுல் டைம் எம்பியாக தேர்ந்து எடுங்கள் என நாகர்கோவில் நடந்த இந்திய கூட்டணி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் பேசினார்.

News April 5, 2024

குமரியை மொத்தமாக நனைத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி

image

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் சிற்றாறில் (கன்னியாகுமரி) – 4 செ.மீ., சிவலோகம், திற்பரப்பில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சுருளக்கோடு, பேச்சிப்பாறையில் தலா 2 செ.மீ., பெருஞ்சாணி அணை, மாம்பழத்துறையாறில் தலா ஒரு செ.மீ. மழை பதிவானது.