India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருநெல்வேலி மாவட்டத்திற்கு இன்று(பிப்ரவரி 6) வருகை தந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், பல்வேறு துறை அமைச்சர்களுடன் தூத்துக்குடி விமான நிலையத்தில் சந்தித்து வரவேற்றார். இந்த நிகழ்வில் திமுகனவிர் பலர் கலந்துகொண்டனர்.

கன்னியாகுமரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், அஞ்சலக பார்சல் சிறப்பு முகாமில் நூல் தொழில் மற்றும் துணி பொருட்கள், மருத்துவ தயாரிப்புகள், மின்னணு பொருட்கள் மற்றும் கருவிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் அழகு சாதனங்கள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாப்பாக அனுப்ப அஞ்சல் துறையின் பார்சல் சேவையை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளார்.

வடகிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் இல்லாத வறண்ட காற்றின் வருகை காரணமாக குமரி மாவட்டத்தில் மேக கூட்டங்கள் இன்றி பகல் நேரத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளது. இதன்படி, குமரியில் இன்று(பிப்.6) அநேக இடங்களில் வெப்பநிலை 34°F முதல் 36°F வரை பதிவாகும். குறிப்பாக, திற்பரப்பு, அருமனை, பேச்சிப்பாறை, களியல், திருவட்டார் பகுதிகளில் 100 டிகிரி அளவுக்கு வெப்பநிலை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று அதிகபட்ச அளவாக மேல் புறத்தில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. பேச்சி பாறை பகுதியில் 35 டிகிரி செல்சியஸ், கன்னியாகுமரியில் 34 டிகிரி செல்சியஸ், நெய்யூர் 34 டிகிரி, திருப்பதி சாரம் 33 டிகிரி, நாகர்கோவில் 33 டிகிரி, கல்லார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரி கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில்குமார் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், “பொதுமக்களுக்கு சிறந்த மற்றும் பாதுகாப்பான பார்சல் சேவையை வழங்க அஞ்சத்துறை பிப்ரவரி 1 முதல் 28 வரை பார்சல் சிறப்பு முகாம் நடத்துகிறது. இந்த முகாம் குமரி கோட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது. சில குறிப்பிட்ட வகை பார்சல்களுக்கு சிறப்பு தள்ளுபடியும் வழங்கப்படும்” என அதில் கூறியுள்ளார்.

இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் சுரத் சிங் நாளை(பிப்.6) குமரி வருகிறார். மதியம் 1.30 மணிக்கு விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குமரி வரும் அவருக்கு தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகையில் உயர் அதிகாரிகள் வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் குமரியில் உள்ளசுற்றுலா தலங்களை பார்வையிடுகிறார். பின்னர் மாலை 4.30 மணிக்கு அவர் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு செல்கிறார்.

குமரியில் குழந்தைகள் அறிவு திருவிழா வருகிற 15ஆம் தேதி காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளியில் நடைபெறுகிறது.இந்த விழாவில் ஓவிய போட்டி, மழலை பாடல் மற்றும் கதை சொல்லும் போட்டி, கற்பனை திறன் போட்டி, ஏபிசிடி வரிசைப்படுத்தும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.*உங்கள் பக்கத்து வீட்டு பெற்றோருக்கு பகிரவும்*

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகரித்து வருகிறது. இன்று 92 டிகிரி வெப்ப சூழல் இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகிறார்கள். வெப்பம் அதிகரித்து வரும் நிலையில் சாலைகளில் பொதுமக்கள் குடை பிடித்து நடந்து செல்வதையே காண முடிகிறது. இதேபோல் மக்கள் அதிகமாக கூடும் வடசேரி மார்க்கெட், அப்டா மார்க்கெட், செம்மங்குடி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பலர் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் பணம் வாங்கியவர்களை மிரட்டி அவர்களை தற்கொலைக்கு தூண்டும் வகையில் நடந்து கொள்ளும் நிலையில், கந்து வட்டி வசூலிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குமரி மாவட்ட மலையோர பகுதிகளான களியல், கடையால் சுற்று வட்டார பகுதிகளிலும் பெரும்பாலும் ரப்பர் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ரப்பர் பால் மற்றும் சீட்டின் விலை நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில், தற்போது இலையுதிர் காலமும் தொடங்கிவிட்டதால் ரப்பர் மரத்தில் உள்ள இலைகளும் உதிர்ந்து வருகின்றன. மேலும் ரப்பர் பால் உற்பத்தியும் குறைந்து வருகிறது. இதனால் ரப்பர் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.