Kanyakumari

News May 24, 2024

அய்யா வைகுண்டசாமி தலைமைபதி கொடியேற்றம்

image

குமரி மாவட்டத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான சாமித்தோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா இன்று (மே.24) தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. வைகாசி திருவிழாவையொட்டி இன்று காலை தலைமை பதியில் கொடியேற்று விழா சிறப்பாக நடைபெற்றது. நடைபெற்ற கொடியேற்று விழா நிகழ்ச்சியில் உள்ளூர் மற்றும் வெளியூர் பகுதிகளில் இருந்து அய்யா வைகுண்டர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

News May 24, 2024

குமரி மாவட்டத்திற்கு மழை

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.24) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது

image

தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநில வனத்துறைகள் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்துகிறது. குமரி மாவட்டத்தில் 18 பகுதிகளில் 4 வனச்சரகர்கள், மேற்பார்வையில் 49, ஊழியர்கள் 22 தன்னார்வலர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று துவங்கிய பணி நாளை முடிவடைகிறது. வனத்தில் யானை செல்லும் பாதை, யானை சாணம் ஆகியவற்றை வைத்து கணக்கிடும் பணி நடக்கிறது என மாவட்ட வனத்துறையினர் தெரிவித்தார். 

News May 23, 2024

கனமழையில் மூதாட்டியின் வீடு இடிந்து விழுந்தது

image

குலசேகரத்தை அடுத்த பிணந்தோடு புலிக் கூட்டுவிளையைச் சேர்ந்த மூதாட்டி எஸ்தர் (71). இவருடன் குஞ்ஞாலி என்ற மூதாட்டியும் வசித்து வந்தார். இன்று பெய்த கனமழையில் எஸ்தரின் வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது அந்த இடத்தில் யாரும் இல்லாததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்நிலையில், இடிந்த வீட்டை சரி செய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என எஸ்தர் கோரிக்கை விடுத்தார்.

News May 23, 2024

குடிபோதையில் மயங்கி விழுந்த வாலிபர் மரணம்

image

மார்த்தாண்டம் அருகேயுள்ள சிறியகாட்டுவிளையை சேர்ந்தவர் சுனில்(39). மது குடிக்கும் பழக்கம் உடையவர். இந்நிலையில் நேற்று மதியம் மார்த்தாண்டத்தில் மதுபோதையில் மயங்கி கிடந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News May 23, 2024

சிற்றாறு அணை நீர்மட்டம் கிடு கிடு உயர்வு

image

குமரி மாவட்டம் முழுக்க 1528.5 மிமீ மழை பதிவாகி உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணைக்கு 1239 கன அடி தண்ணீர் உள்ள வரவாக உள்ளது . 45.25அடியாக நீர்மட்டம் உயர்ந்ததால் 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 77அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 51.3 அடியாக உயர்ந்துள்ளது. 18 அடி கொள்ளவு கொண்ட சிற்றாறு 1 அணை 12.46 அடியாகவும் சிற்றாறு 2 அணை 12.56 அடியாகவும் கிடு கிடுவென உயர்ந்துள்ளது .

News May 23, 2024

மாநகராட்சி முக்கிய அறிவிப்பு 

image

குமரி: சில வணிக நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் மழைக்காலம், இரவு நேரங்களில் செப்டிக் டேங்க்கிற்கு கழிவுகள் செல்வதை தடுத்து, மாற்று குழாய்கள் மூலம் மழைநீர் வடிகாலில் விட்டு வருகின்றனர். ஆய்வின் போது இதை கண்டு பிடித்தால் முதலில் ₹50,000, 2வது முறை சிக்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். மேலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News May 23, 2024

வெறிச்சோடிய சர்வதேச சுற்றுலா தலம்

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை முற்றிலுமாக குறைந்து சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்செடி காணப்படுகிறது.

News May 23, 2024

குமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு

image

கன்னியாகுமரி மாவட்ட அணைகளில் இன்றைய நீர் இருப்பு விவரம் வருமாறு: 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1, 2 அணைகளில் முறையே 12.46, 12.56 அடி நீரும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறையில் 45.25 அடி நீரும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் 51.3.அடி நீரும், 25 அடி கொள்ளளவு கொண்ட முக்கடல் அணையில் 2.7அடி நீரும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கையில் 15.4 அடி நீரும் இருப்பு உள்ளது.

News May 23, 2024

இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மே.23) காலை 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, குமரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.