Kanyakumari

News November 25, 2024

இன்று முதல் நவ.,29 வரை வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம்

image

பள்ளி குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணர்வு வாரம் இன்று முதல் நவ.,29ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதையொட்டி பள்ளியில் ‘மாணவர் மனசு’ திட்டம் சார்ந்து விளக்க உரை காலையில் இடம்பெற வேண்டும். மாணவர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் 28 (or) 29ம் தேதி நடத்த வேண்டும். பள்ளியில் பாலியல் புகார் பெறப்பட்டால் 14417, 1098 எண்களில் தகவல் அளிக்க வேண்டும் என தமிழக பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

News November 25, 2024

குமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#காலை 10:30க்கு CPIM அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பார்வதிபுரம் பாலம் அருகே கணியான் குளம் இணைப்பு கிராம சாலை குறுக்கே நான்கு வழிச்சாலை அமையும் இடத்தில் சுரங்கப்பாதை அமைக்ககோரி ஆர்ப்பாட்டம். #காலை 10க்கு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு சார்பில் மாநகராட்சி பூங்கா முன்பு வன்முறை எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம். #மாலை 5.30க்கு ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

News November 25, 2024

கன்னியாகுமரி மாவட்ட இன்றைய முக்கிய நிகழ்வுகள்

image

#குமரி மாவட்டத்தில் இன்று(நவ.,25) காலை 10 மணிக்கு கீரிப்பாறை அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள், கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலையில் மருத்துவரை நியமிக்க கேட்டு வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றனர். #காலை 10 மணி பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மார்த்தாண்டம் பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மனித சங்கிலி போராட்டம்.

News November 24, 2024

சவுக்கு தோப்பில் கிடந்த மனித எலும்பு கூடு

image

கன்னியாகுமரி மண்டைக்காடு கூட்டுமங்கலம் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சவுக்கு தோட்டம் அருகே கடற்கரையில் இன்று மனித உடல் பாகங்கள் அழுகி சிதைந்த நிலையில் எலும்பு கூடு கிடந்துள்ளது. தகவல் அறிந்து அங்கு சென்ற குளச்சல் கடலோர காவல் நிலைய போலீசார் சவுக்கு தோப்பில் கிடந்த எலும்பு கூட்டை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News November 24, 2024

சங்கமம் – நம்ம ஊரு திருவிழாவில் பங்கேற்க அரசு அழைப்பு

image

2025 பொங்கலன்று சென்னை & 7 இடங்களில் நடக்கும் “சங்கமம் நம்ம ஊரு திருவிழாவில்” பங்கேற்க விரும்பும் குமரி மாவட்ட கலைக்குழுவினர், தங்கள் கலைத்திறமையை வெளிப்படுத்தும் 5 நிமிட வீடியோவை CD/Pen Drive ல் உதவி இயக்குநர் மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21 அரசு அலுவலர் குடியிருப்பு, திருநெல்வேலி 627007. போன்: 0462-2553890 Email: racct-nu@gmail.com என்ற முகவரியில் அனுப்பலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

News November 24, 2024

அறிக்கை வெளியிட்டுள்ள சுப.உதயகுமார்

image

அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் சுப உதயகுமார் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“கூடங்குளம் வழக்குகள் திரும்பப் பெறப்படாமல் இருப்பதற்கு சட்டப்பேரவை தலைவர் சில காவல்துறை அதிகாரிகளை காரணம் காட்டுகிறார்; இன்னொரு பக்கம், புதிதாக சம்மன் அனுப்பி கொண்டிருக்கிறார்கள்;அரசுக்குத் தெரியாமல் இவையெல்லாம் நடக்கின்றன என்றால், இது என்ன?; விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்

News November 24, 2024

நீர்மூழ்கிக் கப்பல் மோதி மாயமான மீனவர்களை மீட்க கோரிக்கை

image

குமரி, கொட்டில்பாடு பகுதியைச் சேர்ந்த ஜெனிஸ் மோன் உட்பட 13 மீனவர்கள் இம்மாதம் 15ஆம் தேதி  ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கோவா கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த நீர்மூழ்கிக் கப்பல் படகுடன் மோதியது. இதில் ஜெனிஸ் மோன் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் படகுடன் மூழ்கிவிட்டனர். அவர்களை மீட்க இன்று தெற்காசிய மீனவர் தோழமை மத்திய மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

News November 24, 2024

குமரி கடல் பகுதியில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

image

காற்றழுத்த தாழ்வு நிலையின் வெளி சுற்றின் காற்று காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை, குமரி முனைக்கு தெற்கு தென்கிழக்கு பகுதியில் கடலில் 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகரிக்கும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News November 24, 2024

முன்னாள் எம்எல்ஏ தந்தை உயிரிழப்பு

image

திருவட்டார் சட்டமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் தந்தை ராஜையன் (வயது 88) நேற்று இரவு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் செல்லச்சாமி முன்னாள் எம்பி பெல்லார் மின் உட்பட ஏராளமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேரில் சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.

News November 24, 2024

ஊரக திறனாய்வு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

அரசு தேர்வுகள் இயக்கம் சார்பில் 2024-25ம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு வரும் டிச.14ம் தேதி நடக்கிறது. இந்த தேர்வுக்கு கட்டணம் செலுத்த கடைசி நாள் நவ.22 என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் நாளை(நவ.25) வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என அரசு தேர்வுகள் இணை இயக்குநர் மகேஷ்வரி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு நேற்று(நவ.23) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!